வல்பிட்டிய பள்ளிவாசலை அடித்து நொறுக்க திரண்டு வந்த பேரின வெறியர்களுடன் போராடிய நிலையிலேயே நிராயுத பாணிகளாக இருந்த முஸ்லிம் சகோதரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்

435

அளுத்கமை பொலிஸ் பிரிவில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் நேற்று இரவு வல்பிட்டிய பள்ளிவாசலில் பேரின வெறியர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன் எண்பதுக்கு மேற்பட்டோர் காயமுற்ற நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் தவித்துக் கொண்டிருந்ததாகவும் இன்று அதிகாலை வேளையே அவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வல்பிட்டிய பள்ளிவாசலை அடித்து நொறுக்க திரண்டு வந்த பேரின வெறியர்களுடன் போராடிய நிலையிலேயே நிராயுத பாணிகளாக இருந்த முஸ்லிம் சகோதரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று அறிய முடிகிறது. இதன்போது மேலும் எண்பது பேர் அளவில் படுகாயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

hakeem_16-6-2014_1

hakeem_16-6-2014_3
Aluthgama-3Aluthgama-7Aluthgama-14deathdt-2

SHARE