வழிகாட்ட ஆளில்லை: வருத்தப்படுகிறார் சதா 

456




சினிமாவில் வழிகாட்ட எனக்கு காட் பாதர் கிடையாது. எனவே டாப் இடத்தை அடைய முடியவில்லை என்றார் சதா. சதாவை ஞாபகம் இருக்கிறதா? ஜெயம் படத்தில் அறிமுகமானவரேதான். பாவாடை, தாவணியில் அறிமுகமாகி இளவட்டங்களை கவர்ந்தவர் அடுத்த படத்திலேயே அதிரடி கவர்ச்சி வேடத்தில் நடித்து ஷாக் கொடுத்தார். அந்நியன், திருப்பதி, உன்னாலே உன்னாலே என அடுத்தடுத்து படங்களில் நடித்தாலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் வாய்ப்பில்லாமல் காணாமல்போனார்.

தெலுங்கு, மலையாளத்துக்கு போனார். அங்கும் வாய்ப்புகள் மங்கின. தெலுங்கில் எமலீலா 2ம் பாகத்திலும், மலையாளத்தில் கெல்வி என்ற படத்திலும் கெஸ்ட் ரோலில் நடித்தார். டாப் இடத்திற்கு வருவீர்கள் என்று எதிர்பார்த்த நீங்கள் அந்த இடத்தை அடையாதது ஏன்? என்று சதாவிடம் கேட்டபோது மனம் திறந்தார். அவர் கூறும்போது, தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க வந்தபோது எந்த ஆயத்தமுடனும் வரவில்லை. வெற்றியை எதிர்பார்க்கவும் இல்லை. இதுவரை என்ன சாதித்தேனோ அதெல்லாம் என்னுடைய சொந்த உழைப்பில் செய்தது.

அதில் எனக்கு சந்தோஷம். நான் ஆசாரமான குடும்பத்திலிருந்து வருகிறேன். நடிப்பை மற்றொரு வேலையாகத்தான் பார்த்தேன். சினிமாவில் எனக்கு வழிகாட்ட காட் பாதர் யாரும் கிடையாது. மற்றவர்களுடன் தொடர்பில் இருக்கும் அளவுக்கு நட்பு எல்லையும் பெரிய அளவில் கிடையாது. ஷூட்டிங் எப்போது முடிகிறதோ உடனே வீட்டுக்கு புறப்பட்டு சென்றுவிடுவேன். வாழ்க்கையில் என்ன வருகிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். வாழ்க்கையில் எதையும் திட்டமிட்டு செய்வதில்லை என்றார்

 

SHARE