வவுனியாவில் ஆலயங்களுக்கு இந்து கலாசார அமைச்சால் நிதியுதவி

148

 

வவுனியாவில் ஆலயங்களுக்கு இந்து கலாசார அமைச்சால் நிதியுதவி

வவுனியா மாவட்ட இந்து ஆலயங்களின் புனரமைப்பு மற்றும் கட்டுமான நடவடிக்கைகளுக்கு

unnamed (1) unnamed

இந்து கலாசார மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் நிதி

இன்று வவுனியா, உள்வட்ட வீதியில் அமைந்துள்ள சிந்தாமணி பிள்ளையார்

ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஆலயத்தின் புனரமைப்பு

பணிகளையும் பார்வையிட்டார். அதன் பின் சிந்தாமணி பிள்ளையார் ஆலய

மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது தெரிவு செய்யப்பட்ட 44 இந்து

ஆலயங்களுக்கான நிதி உதவிகளை வழங்கினார்.

அத்துடன் ஆலய தர்மகர்த்தாக்கள் மற்றும் மக்களுடனும் கலந்துரையாடி அவர்களது

குறைகள், தேவைகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார். இந்த நிகழ்வில்

அமைச்சருடன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குனைஸ்பாறுக், ஐக்கிய

தேசியக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் கருணாதாச, வவுனியா பிரதேச செயலாளர்

க.உதயராசா, கலாசார உத்தியோகத்தர் நித்தியானத்தம், அமைச்சின் செயலாளர்,

ஆலய தர்மகர்த்தாக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

SHARE