![IMG_20141123_164002[1]](http://athavannews.com/wp-content/uploads/2014/11/IMG_20141123_1640021.jpg)
வவுனியா, வைரவபுளியங்குளம், யங்ஸ்ரார் (young star) விளையாட்டு மைதானத்திற்கு அருகில் ஒட்டப்பட்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சுவரொட்டிகளுக்கு சாணம் வீசப்பட்டுள்ளது.
தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானதும் ‘தாய் நாட்டின் தீர்ப்பு மஹிந்த’, ‘மகத்துவம் மிக்க ஜனாதிபதி மஹிந்த’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுவரொட்டிகள் நீலம், சிவப்பு, பச்சை நிற வண்ணங்களில் வவுனியாவில் பரவலாக ஓட்டப்பட்டுள்ளன.
இவற்றுள் வைரவபுளியங்குளம், யங்ஸ்ரார் விளையாட்டு மைதானம் முன்பாக உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றின் பெயர்ப் பலகையில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் மீதே சாணம் வீசப்பட்டுள்ளது.