வவுனியாவில் சிறுவனை கடத்தி கப்பம் பெற்றமை தொடர்பில் விசாரணை

322

 

வவுனியா பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் பிள்ளையை கடத்தி கப்பம் பெற்ற சம்பவம் குறித்து வவுனியா காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வர்த்தகரின் 5 வயதான மகன் கடந்த 9 ஆம் திகதி முன்பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது இனந்தெரியாத குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

கடத்திச் சிறுவனை விடுவிக்க வேண்டுமாயின் தமக்கு 30 இலட்சம் ரூபாவை கப்பமாக வழங்க வேண்டும் என கடத்தல்காரர்கள் கூறியுள்ளனர்.

வர்த்தகர் 10 லட்சம் ரூபாவை கடத்தல்கார்களுக்கு வழங்கியுள்ளதுடன் அவர்கள் சிறுவனை வீட்டுக்கு அருகில் உள்ள பிரதேசத்தில் விட்டுச் சென்றுள்ளனர்.

மகன் விடுவிக்கப்பட்டதை அடுத்து, இச்சம்பவம் குறித்து வவுனியா காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்களை கைது செய்ய வவுனியா காவற்துறையினர் சில காவற்துறை குழுக்கள் ஊடாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

SHARE