வவுனியாவில் புதிய மாக்சிஸ லெலினிசக் கட்சியின் மே தின ஊர்வலம்

293

இன்று வெள்ளிக்கிழமை வவுனியாவில் புதிய மாக்சிஸ லெலினிசக் கட்சியின் மே தின ஊர்வலம் இன்று காலை நடைபெற்றது. வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய முன்றிலில் ஆரம்பித்த பேரணி பிரதான வீதி ஊடாக பஸார் வீதியைச் சென்றடைந்து அங்கிருந்து வவுனியா நகரசபை வளாகத்தை சென்றடைந்தது. அங்கு புதிய மாக்சிச லெனின் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பிரதீபன் தலைமையில் மே தினப் பொதுக் கூட்டம் இடம்பெற்றது. இதில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள், தொழிலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.                                                                                        [  புரட்சிகர மேதினம் 2015]
1. உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்.
2. மாற்று அரசியலை முன்னெடுப்போம்.
மக்கள் அதிகாரத்தை நிலை நாட்டுவோம்.
3. இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வுகொடு.
அந்நியத் தலையீட்டுக்கு இடமளிக்காதே.
4. இனப் பிரச்சினைத் தீர்வுக்கு
சுயநிர்ணய உரிமையை அங்கீகரி
5. விவசாயிகளின் கடனை இரத்துச் செய்
நெல்லின் விலையைக் குறைக்காதே.
விவசாயி வயிற்றில் அடிக்காதே.
உணவுப் பொருளை இறக்காதே.
உணவு உற்பத்தியைத் தடுக்காதே.
6. இந்திய மீன்பிடிப் படகுகளை
இலங்கைக்குள் வருவதை தடுத்து நிறுத்து.
வடபுல மீனவர் வாழ்க்கையினை
நாசஞ் செய்ய அனுமதிக்காதே.
7. அரசியல் கைதிகளை விடுதலை செய்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு
புனர்வாழ்வு கொடு.
காணாமல் போனோர் விபரங்களை
பகிரங்கமாக வெளியிடு.
8. இலவசக் கல்விக்கு ஆப்பு வைக்காதே.
பணம்பறிக்கும் சுற்றுநிருபத்தை ரத்துச் செய்
கல்வி வளர்ச்சிக்கு 6மூ நிதி ஒதுக்கு.
9. அரச தனியார் ஊழியர்களின்
அடிப்படைச் சம்பளத்தை உயர்த்து.
தனியார் ஊழியரின் சேவையை உறுதிப்படுத்து.
வடக்கில் தொழில் நீதி மன்றை
உடனடியாக இயங்கச் செய்
10. ரயில்வே கடவை ஊழியர்களை
திணைக்கள ஊழியராக நியமனஞ்செய்.
11. அங்காடி வியாபாரிகளை தவிக்கவிடாதே.
பொருத்தமான இடத்தை ஏற்பாடு செய்.
12. குளங்களைத் தூரவிடாதே, விவசாயத்தை சாகவிடாதே.
13. பெண்களின் உரிமையை மறுக்காதே.
பால் சமத்துவத்தை உறுதிப்படுத்து.
14. இனவாத அமைப்புக்களை இயங்கவிடாதே.
பொது பல சேனாவை தடைசெய்.

SAMSUNG CAMERA PICTURES

SHARE