வவுனியாவில் பொலிஸ் அதிகாரியின் துணையுடன் புதையல் தோண்டிய ஏழு பேர் கைது

217

 

வவுனியாவில் புதையல் தோண்டிய ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவத்துடன் வவுனியா பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்து கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிசார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
unnamed (2)
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, குடாகச்சகொடி பகுதியில்  இயந்திரங்களின் துணையுடன் குறிப்பிட்ட ஓரு குழுவினர் கடந்த சில நாட்களாக புதையல் தோண்டியுள்ளனர். இது தொடர்பில் அப் பகுதி மக்கள் பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து இது தொடர்பான தீவிர விசாரணைகளை கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிசார் ஆரம்பித்துள்ளனர். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது நேற்று முன்தினம் (22) நால்வரும், நேற்றைய தினம் (23) மூவரும் ஆக 7 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து பெக்கோ இயந்திரம், ஆட்டோ, தோண்டுவதற்கான உபகரணங்கள் என்பனவும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, இப் புதையல் தோண்டிய சம்பத்துடன் வவுனியா பொலிஸ் உயர் அதிகாரிகள் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரியவருகிறது.
SHARE