வவுனியா மாவட்டத்தில் இம் முறை ஜனாதிபதி தேர்தலுக்கு 109705 பேர் வாக்களிக்கவுள்ளதாக வவுனியா மாவட்ட தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2014 ஆம் ஆண்டின் தேர்தல் இடாப்பின் பிரகாரம் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் உள்ளடங்கியதாக 109705 பேர் வாக்களிக்கவுள்ளதாகவும் அவர்களுக்காக 134 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் 15 வாக்களிப்பு எண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அத் தகவல்கள் தெரிவித்தன.
இதேவேளை 15 வாக்கு எண்ணும் நிலையங்களில் 9 நிலையங்களில் சாதாரண வாக்குகளும் 6 நிலையங்களில் தபால்மூல வாக்குகளும் எண்ணப்படவுள்ளதாகவும் இம் முறை தேர்தலில் 8364 பேர் தபால் மூலமாக வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் 2013 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் 104252 பேர் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இம் முறை 5453 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.
வாக்களிப்பு நிலையங்களுக்காக வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் 35 பாடசாலைகளிலும் வவனியா தெற்கு கல்வி வலயத்தில் 50 மேற்பட்ட பாடசாலைகளிலும் வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.