வவுனியா அரச அதிபரை இடமாற்றம் செய்ய கோரி கடந்த வியாழக்கிழமை உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேராவுக்கு வட மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

141

 

வவுனியா அரச அதிபரை இடமாற்றம் செய்ய கோரி கடந்த வியாழக்கிழமை உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேராவுக்கு வட மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

hqdefault

அத்துடன் உள்நாட்டலுவல்கள் அமைச்சருடன் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த விடயம் குறித்துப் பேசினார் என அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். விசாரணைகள் எதுவும் செய்யாமல் அவரை உடனடியாக இடமாற்றம் செய்யமுடியாதென்றும் இரண்டு பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்து விசாரணைகள் மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா தன்னிடம் தெரிவித்தார் என்றும் சீ.வீ.கே. சிவஞானம் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த விடயம் குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா ஆகியோரிடமும் தாம் தெரியபடுத்தியுள்ளார் எனவும் அவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுக்களை நடத்தி கடிதம் ஒன்றை அவரிடம் கையளித்தனர் என்றும் – வவுனியா அரச அதிபர் இடமாற்றம் தொடர்பில் தான் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றும் பிரதமர் அவர்களிடம் கூறினார் என சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்

SHARE