வவுனியா சிதம்பரபுரம் அகதிகள் முகாமிலிருந்து சவுதிஅரேபியா சென்ற குடும்ப பெண் மரணம்.

167

வெளிநாடு சென்ற குடும்ப பெண் மரணம்

வவுனியா சிதம்பரபுரம் அகதிகள் முகாமிலிருந்து சவுதிஅரேபியா சென்ற இரண்டு

பிள்ளைகளின் தாயாராகிய சுப்பையா கமலா வயது 36 என்பவரே

சவுதிஅரேபியாவில் 26-06-2015 அன்று மரணமானதாக தெரியவருகிறது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது குடும்பத்தின் பெருளாதார பிரச்சனை

காரணமாக பணிப்பெண்ணாக 12-05-2015 அன்று சவுதி அரேபியா சென்ற கமலா

26-06-2015 அன்று இறந்துவிட்ட போதும் ஒருமாதம் கடந்த நிலையிலேயே கமலா

தற்கொலை செய்து இறந்து விட்டதாக வீட்டாருக்கு 02-07-2015 அன்று தகவல்

அறிவிக்கப்பட்டது. ஒருமாதம் கடந்துவிட்ட நிலையிலும் இன்றுவரை அவரது உடலம்

வீட்டாரிடம் ஒப்படைக்கப்படவில்லை கமலாவினுடைய இரண்டு பிள்ளைகளும்

அம்மம்மாவுடன் வசித்துவரும் நிலையில் மூத்த மகன் நவநீதராசா சந்திரன் எமது

செய்திச்சேவைக்கு கருத்துத் தெரிவிக்கையில்

அம்மா வெளிநாடு போவது எங்களுக்கு விருப்பமில்லாத போதும் குடும்ப வறுமை

காரணமாகவும் பிள்ளைகளை படிக்கவைக்கவும் அம்மா சவுதி அரேபியா சென்றதாக

தெரிவித்த சந்திரன் தனது தாயின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும் தனது தாய்

சவுதியில் சென்று தற்கொலை செய்ய வேண்டிய தேவை இல்லையொன தெரிவித்த சந்திரன்

தனது தாயின் பூதவுடலை இலங்கைக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை

எடுக்க வேண்டுமென தெரிவித்தார்.

unnamed (14) unnamed (15) unnamed (16)

SHARE