வவுனியா நகரசபைக்குட்பட்ட கோழி இறைச்சிக்கடைகளுக்கு அருகில் அசுத்தக்கான்களும், சிறுநீர்க் கழிக்கும் இடமும் அமைந்திருப்பதால் கடை உரிமையாளர்கள் அதிருப்தி – உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு தினப்புயல்.

353

 

இன்று காலை (06.04.2015) வவுனியா நகரசபையின் கடைகள், காண்கள் போன்றவற்றை சுகாதார பணிமனையின் அதிகாரிகள் பரிசோதனைகளை மேற்கொண்டு, குப்பைக்கூழங்கள் மற்றும் தேங்கி நிற்கும் நீர் போன்றவற்றை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர். இதேவேளை ஹொரவபொத்தானையின் வீதியோரக் கடைகளின் கூரைகள் போன்றனவும் இவர்களால் அகற்றப்பட்டது. ஆனால் அதற்கு அருகில் இருக்கும் கோழி இறைச்சிக்கடையினை இந்த அதிகாரிகள் கவனத்திற்கொள்ளவில்லை. இதனைவிடவும் தொற்றுநோய்கள் பரவக்கூடிய அறிகுறிகள் இப்பகுதியில் காணப்படுகின்றது. குளக்கரையினை அண்டிய பகுதிகளில் சிறுநீரினைக் கழிப்பதனையே விற்பனையாளர்கள் வழக்கமாகக்கொண்டுள்ளனர். இதனால் பெண் வாடிக்கையாளர்கள் இப்பகுதிக்கு வருவதனை நிறுத்தியுள்ளனர்.

7777777777777777

வருடத்திற்கு 112000 ரூபாய் இந்த இறைச்சிக்கடை மூலம் வருமானவரியாக அறவிடப்பட்டுள்ளது. இதுவரையிலும் கோழிக்கடைக்கான உரிய வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை. இவ்விடயம் தொடர்பாக அப்பகுதியின் கோழிக்கடை உரிமையாளர்கள் கூறிய விடயங்களை காணொளியின் மூலம் காணலாம்.

 

IMG_20150406_110653 IMG_20150406_111500 copy

SHARE