வவுனியா நோக்கிச் சென்ற ரயில் மோதி நால்வர் பலி

320
மாத்தறையில் இருந்து வவுனியாவுக்கு சென்ற “ரஜரட்ட ரெஜின” புகையிரதத்தில் கெப் ரக வாகனம் ஒன்று மோதியதால் அதில் பயணித்த நான்கு பேர் பலியாகியதுடன், மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் ராகம பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. புகையிரதம் பயணித்துக்கொண்ருக்கையில் குறித்த வாகனம் கடவையை கடக்க முற்பட்டபோதே அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக, பிரதான புகையிரத பாதையினூடான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

படுகாயமடைந்தோரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர்கள் இராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

SHARE