வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

535

வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொல்லப்பட்ட மாணவி வித்தியாவுக்கு நீதிகேட்டு எதிர்காலத்தில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் குற்றவாழிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்க கோரியும் இன்று காலை 10.00 மணியளவில் வவுனியா புதுக்குள மகாவித்தியாலய மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குற்றவாளிகள் 11 பேரா இல்லை இன்னமும் இருக்கிறார்களா? குற்றவாளிகளை நாங்களே தண்டிப்போம்இ பெண்கள் என்ன விழையாட்டு பொருளா? சிறுவர் உரிமைகள் எங்கே? குற்றவாழிகளுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராகாதேஇ விடியலைநோக்கும் பெண்களுக்கு விடிவுகொடுஇ வித்தியாவிற்கு நீதி எங்கேஇ கொலையாளியை காப்பாற்றாதே? பெண்களுக்கெதிரான வன்முறைகளை நிறுத்து போன்ற வாசகங்களை தாங்கியிருந்தனர்.

unnamed (4) unnamed (5) unnamed (7) unnamed (8)

SHARE