வவுனியா பூவரசங்குளம் மகா வித்தியாலய மாணவிகளுடன் சில்மிசம் புரிந்த ஆசிரியர் ஒருவர் வவுனியாப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

271

வவுனியா பூவரசங்குளம் மகா வித்தியாலய மாணவிகளுடன் சில்மிசம் புரிந்த ஆசிரியர் ஒருவர் வவுனியாப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை சமூகம் கொடுத்த முறைப்பாட்டையடுத்து, ஆசாமி ஆசிரியரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

வவுனியா பூவரசங்குளம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவிகளின் மீது குறித்த ஆசிரியர் பாலியல் ரீதியில் அங்க சேட்டை விட்டுள்ளார்.

Studen

இவ்விடயம் தொடர்பில் பாடசாலை மாணவிகள் அதிபருக்கு தெரியப்படுத்தினர். தொடர்ந்து தங்கள் பெற்றோருக்கும் மாணவிகள் தெரியப்படுத்தி உள்ளனர்.

கடந்த சில நாட்களாக இவ் ஆசிரியர், மாணவிகள் மீது அங்க சேட்டை விட்டமை தொடர்பில் வெளியாட்களுக்குத் தெரியாது மூடி மறைக்கும் நோக்குடன் மாணவிகள் மீது அச்சுறுத்தல் விடுத்து வந்தமை தொடர்பில் பாடசாலை அதிபர், பெற்றோருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளமையை அடுத்து பொலிசாருக்கு பெற்றோர் முறையீடு செய்துள்ளனர்.

இதனை அடுத்தே பொலிஸார் குறித்த ஆசிரியரை கைது செய்துள்ளனர்.

SHARE