வவுனியாவில் பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது துப்பாக்கிசூடு

341
வவுனியா பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிசூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாவக்குளம் அருகில்  இரவு குறித்த துப்பாக்கிசூடு இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர் 36 வயதுடைய பிரியந்த பிரேமரத்தின எனப்படுவராகும்.   இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குறித்த பொலிஸ் அதிகாரி இவ்வாறு துப்பாக்கிசூட்டில் காயமடைந்துள்ளார்.

எப்படியிருப்பினும் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE