வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரால் சிதம்பரபுர காணி வேறொரு நோக்கத்திற்காக அளவீடு செய்யப்பட்டு துண்டுகளா பிரிக்கப்பட்டுள்ளது-அமைச்சர் சத்தியலிங்கம்

341

 

வவுனியா சிதம்பரபுர மக்களை பார்வையிட்டார் வடமாகாண அமைச்சர் சத்தியலிங்கம்

unnamed (1) unnamed (2) unnamed (3) unnamed (4)

வவுனியா சிதம்பரபுர நலன்புரி நிலையத்தை சேர்ந்த மக்கள் தங்களுக்கு காணி வழங்க

கோரி மாவட்ட செயலகத்தின் முன்பாக நேற்றையதினம் (08-04-2015)

ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த மக்களின் ஆர்ப்பாட்டத்தின் எதிரொலியாக இன்று வடமாகாண

சுகாதார,புனர்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் வடமாகாணசபை

உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் சிதம்பரபுர மக்களை சந்தித்து

அவர்களுடைய குறைகளை கேட்டறிந்துகொண்டதுடன், அம்மக்களின் வீடுகளையும்

பார்வையிட்டனர்.

மேற்படி மக்கள் சந்திப்பில் உரையாற்றிய வடமாகாண சுகாதார அமைச்சர்

ப.சத்தியலிங்கம்

சென்ற வருடம் (2014 ஓகஸ்டு;) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில்

நீங்கள் வசிக்கும் காணிகள் உங்களுக்கே பிரித்து வழங்க முடிவெடுக்கப்பட்டது என

தெரிவித்த அவர் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் நடைமுறைப்படுத்தவில்லையென

குற்றஞ்சாட்டினார். தெடர்ந்து கருத்து வெளியிட்ட ப.சத்தியலிங்கம் 2014 ஆண்டு

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரால் சிதம்பரபுர காணி வேறொரு

நோக்கத்திற்காக அளவீடு செய்யப்பட்டு துண்டுகளா பிரிக்கப்பட்டுள்ளது என

குறிப்பிட்ட அவர் அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்தார்.

அத்துடன் சிதம்பரபுர மக்களுக்கு காணிகள் பிரித்து தரப்படும் எனவும்

நம்பிக்கையுடன் இருக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து நிகழ்வில் உரை நிகழ்த்திய வடமாகாண சபை உறுப்பினர்

ஜி.ரி.லிங்கநாதன்

சிதம்பரபுர கிராமத்தைவிட்டு மக்களை போகவேண்டாம் என்று கேட்டுகொண்டதுடன்

அப்படி போக நிரப்பந்திக்கப்பட்டால் அமைச்சருக்கு அல்லது மாகாணசபை

உறுப்பினர்களுக்கு தகவல் தரும்படி கேட்டுக்கொண்டார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட

வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் வவுனியா மாவட்ட பெரும்பான்மை இனத்தைசேர்ந்த

அரசியல்வாதியொரவருடன் சேர்ந்து சிதம்பரபுர கிராமத்தில் பெரும்பான்மை இன

மக்களை குடியேற்றுவதுதான் அவர்களின் திட்டம் என தெரிவித்தார். தொடர்ந்து கருத்து

வெளியிட்ட வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் மிக விரைவில் வவுனியா

அரசாங்க அதிபருக்கு எதிராக மத்திய அரசாங்கத்தடன் கதைத்து அதற்குரிய நடவடிக்கையை

எடுப்போம் என தெரிவித்தார். அத்தடன் மீள் குடியேற்றத்திற்கான சகல

நடவடிக்கைகளையும் மீள் குடியேற்ற அமைச்சு மேற்கொள்ளும் என மீழ்குடியேற்ற

அமைச்சர் சுவாமிநாதன் உத்தரவாதம் வழங்கியதாக தெரிவித்த அவர் வடமாகாண சபையில்

சிதம்பரபுர கிராமத்தின் காணி தொடர்பாக தீர்மானமொன்று

நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

SHARE