வவுனியா மூன்று முறிப்புப் பகுதியில் வாகன விபத்து

415

 

வவுனியா கண்டிவீதி மூன்றுமுறிப்பு பகுதியில் இன்று விபத்துச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது
unnamed (18) unnamed (19)
வவுனியாவிலிருந்து கண்டி வீதியால் சென்று கொண்டிருந்த கார் ஒன்றை வான் ஒன்று முந்திச்செல்ல முற்பட்ட வேளையே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பெண் ஒருவர் செலுத்திச் சென்ற காரை பின்தொடர்ந்து மிகவும் வேகமாக வந்த வான்  வேகக்கட்டுப்பாட்டை இழந்து குறித்த  காரை சுமார் 25 மீற்றர் வரை அடித்து இழுத்துச் சென்றுள்ளது.
இவ்விபத்தில் சிக்கிய சாரதிகள் இருவரும் அதிஷ்ரவசமாக உயிர்பிழைத்துள்ளதாக அயலவர்கள் தெரிவித்தனர் .
 இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
SHARE