வாட்ஸ்அப்பில் வந்துவிட்டது அசத்தலான அப்டேட்! இனி தேடல் மிகவும் எளிது

20

 

வாட்ஸ் அப் செயலி திகதி வாரியாக மெசேஜ்களை தேடும் வசதியை விரைவில் கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மெட்டாவின் இன்ஸ்டன்ட் மெசேஜ் செயலியான வாட்ஸ்அப் தற்போது புதிய வசதியை பயனர்களுக்காக கொண்டுவர உள்ளது.

அதாவது, ஆப்பிள் iOS மற்றும் வாட்ஸ் அப் வெப் ஆகியவற்றில் மட்டுமே கிடைத்து வந்த மெசேஜ்களை தேடும் வசதியை தான் இனி ஆண்ட்ராய்ட் பயனர்கள் பயன்படுத்தப் போகிறார்கள்.

Whatsapp Joe Maring/Digital Trends

சமீபத்தில் வாட்ஸ் அப் பீட்டா ஆண்ட்ராய்ட் 2.23.24.16 அப்டேட்டுக்குப் பின், ஆண்ட்ராய்ட் போனில் உள்ள வாட்ஸ் அப் செயலியிலும் தற்போது இந்த வசதி கிடைக்கிறது. இட்னன்மூலம் பழைய நியாபகங்களை மிகவும் எளிதாக மீட்க முடியும்.

அதாவது, உங்கள் நண்பர் அல்லது காதலிக்கு அனுப்பிய குறுந்தகவல்களை சிரமமின்றி எடுக்க முடியும். அடுத்து வரும் வாட்ஸ் அப் Update-ன்போது, Search பாரில் புதிதாக காலண்டர் பட்டன் இருக்கும்.

அதனைப் பயன்படுத்தி உங்களுக்கு தேவைப்பட்ட திகதியில் என்ன மாதிரியான மெசேஜ்களை, யாருக்கு அனுப்பி இருக்கிறோம் என தெரிந்து கொள்ளலாம்.

முன்பு Search பாரில் குறிப்பிட டெக்ஸ்டை கொடுத்து பழைய மெசேஜ்களை தேடுவோம். ஆனால், இந்த காலண்டரில் எளிதாக திகதியை தெரிவு செய்து தேடலாம்.

அதேபோல் பல முக்கியமான மெசேஜ்களை திகதி வாரியாக, எந்த விதமான சிரமும் இன்றி படிக்க இயலும். ஆனால், இந்த புதிய வசதி இன்னும் வளர்ச்சி கட்டத்தில் தான் உள்ளது. எனினும் விரைவில் இந்த வசதிகளை வாட்ஸ் அப் அப்டேட்டில் எதிர்பார்க்கலாம் என மெட்டா கூறியுள்ளது.

SHARE