வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

100

 

இந்தியாவில் வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வாட்ஸ்அப் செயலி பயன்படுத்தப்படுகிறது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப நிறுவனமும் பல்வேறு புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், இந்திய அரசு, இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு பயனர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

வாட்ஸ்அப்பில் பாதுகாப்பு குறைபாடு அம்சம் கண்டறியப்பட்டுள்ளதால் பயனர்கள் உடனடியாக தங்களது வாட்ஸ்அப்பை சமீபத்திய புது வெர்ஷனுக்கு அப்டேட் செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளது.

Integer overflow காரணமாக 2 வகையான RCE எனப்படும் (ரிமோட் கோடு எக்ஸிகியூஷன்) பாதுகாப்பு குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக இது வீடியோ அழைப்பு அம்சத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர். ஹேக்கர்கள் கோடு அனுப்பி வாட்ஸ்அப் ஹேக் செய்து தகவல்களை திருட முடியும் என கூறுகின்றனர்.

SHARE