வாட்ஸ் அப் MESSAGE ஹாலிவுட் படங்களை கலாய்த்து எடுத்துள்ளனர்.

327

ஹாலிவுட்டில் வெள்ளை காக்காவை காட்டினால் கூட நம் மக்கள் ’சூப்பர்…கலக்கிட்டான்’ என்று கைத்தட்டுவார்கள். அந்த அளவிற்கு ஹாலிவுட் மோகம் நம்மை மயக்கியுள்ளது.

ஆனால், நம் இன்றைய இளைஞர்கள் மிக விவரம், அவர்களிடம் இருந்து யாரும் தப்பிக்க முடியாது, அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப்பில் ஒரு மெசெஜ் பரவிவருகிறது.

இதில் ‘எப்பவுமே FBI/CBI வேலை பாக்குற எல்லாருமே அண்டர்கவர் போலீஸாக இருப்பார்கள். மக்கள் தொகையில பெரும்பாலான ஆட்கள் போலீஸாக வேலை செய்வார்கள். எப்பேற்பட்ட ஆபத்தாயினும் போலீஸ் குடும்பம் மட்டும் அழகாக சிரித்தப்படி கடைசியில் நிற்பார்கள்.

அமெரிக்க படங்களில் காட்டும் பள்ளிகள் யாவும் கால்பந்து, அல்லது பேஸ் பால் இரு விளையாட்டுகளை மட்டுமே பிரபல படுத்துவார்கள். சிறப்பு ஸ்பான்சர்ஷிப் வாங்கிடுவார்கள் போல.

வேற்று கிரகவாசிகள் பூமியை தாக்க நினைத்தாலே அவர்கள் இறங்கும் இடம் அமெரிக்கா மட்டும் தான். ஏலியன்ஸ் அட்டாக் அமெரிக்கர்கள் மீது மட்டுமே. அமெரிக்காவில் மட்டுமே ஓநாய்கள், வித்யாசமான ஜந்துக்கள், மற்றும் ரத்தக் கட்டேரிகள் வரும்.மற்ற நாடுகளுக்கு அந்த கொடுப்பனை கிடையாது.

இயற்கை சீற்றம் என்றாலே முதலில் தாக்கப்படுவது வெள்ளை மாளிகையும் அதிபரும் தான். அமெரிக்க அதிபர் மட்டுமே நடு ரோட்டில் கூட இறங்கி மக்களுக்காக குரல் கொடுப்பார். தேவைப்பட்டால் துப்பாக்கி சகிதமாக அதிபரே ஆபரேஷனிலும் இறங்குவார்.

கண்டிப்பாக அமெரிக்க படமெனில் ஒரு ஆப்பிரிக்கா நாட்டு கருப்பு நடிகர் பரிதாபமாக உயிர் விடுவார். அதிலும் ஹீரோக்களுக்காக மட்டுமே அவர்களின் உயிர் போகும். ஹ்ம்… இவ்வளவுதான் அமெரிக்க படங்கள்’ என்று கலாய்த்து எடுத்துள்ளனர்.

SHARE