வாய்ப்புக்காக 100 இயக்குனர்களை சந்தித்த ஹீரோ 

331
சென்னை: ‘அகத்திணை’ படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் வர்மா. நிருபர் களிடம் அவர் கூறியதாவது:சொந்த ஊர் தென்காசி. பாண்டிய மன்னர்களின் பெயர், வர்மன் என்று முடியும். அதன் நினைவாக சதீஷ் என்ற பெயரை வர்மாவாக மாற்றியிருக்கிறேன். பிசியோதெரபி படித்து விட்டு லண்டனில்  ஐந்து வருடங்கள் வேலை செய்தேன். அங்கேயே மேற்படிப்பும் முடித்தேன். சினிமா ஆசை காரணமாகலண்டன் வேலையை உதறி விட்டு இந்தியா வந்தேன். இங்கு ஐ.டி கம்பெனிகளில் வேலை செய்துகொண்டே, கடந்த ஐந்து வருடங்களாக வாய்ப்பு தேடினேன். நூறு இயக்குனர்களை சந்தித்து வாய்ப்பு கேட்டிருக்கிறேன். பல படங்களில் கடைசி நேரத்தில் நிராகரிக்கப்பட்டிருக்கிறேன். கடைசியில் இயக்குனர் யு.பி.மருது ‘அகத்திணை’யில் வாய்ப்பு கொடுத்தார். ‘காதலுக்காக எதையும் இழக்கலாம், காதலைத் தவிர’ என்ற ஒன்லைன்தான் கதை. முதலாளி மீதுள்ள மரியாதைக்கும், அவரது மகள் மீதுள்ள காதலுக்கும் இடையில் கிடந்து தவிக்கும் கேரக்டர். படத்தை யும், என்னையும் மக்கள் ஏற்பார்கள் என்று நம்புகிறேன். நான் கார்த்தி சாயலில் இருப்பதாக சொல்கிறார்கள். அது பிளஸ்சா, மைனசா என்று தெரியவில்லை. ஆனால், நான் எனக்கென்று ஒரு பாணியை வகுத்துக்கொள்வேன்.

 

SHARE