வாலு படத்தின் இயக்குனர் படைப்பில் நயன்தாரா, த்ரிஷா, அஞ்சலி

425

 

வாலு படத்தின் இயக்குனர் விஜய் சந்தர் தன்னுடைய முதல் படம் வெளிவருவதற்கு முன்பே அடுத்த பட வேலையை தொடங்கி விட்டார்.
வாலு படத்தின் இடைவெளியை சரியாக உபயோகித்து அடுத்த படத்துக்கான கதை எழுதி இப்படத்துக்கு தற்காலிமாக கன்னிராசி என்ற பெயரும் வைத்து உள்ளார்.
விரைவில் இயக்குனர் பாண்டிராஜிடம் டைட்டிலை உபபேயாகிக்க அனுமதி கேட்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இப்படத்தில் ஜெய் மற்றும் சந்தானம் நடிக்க உள்ளதாகவும் மிக பிரம்மாண்டமான முறையில் 9 கதாநாயகிகளை வைத்து எடுக்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறது.இப்படத்தில் த்ரிஷா, நயனதாரா ஆண்ட்ரியா மற்றும் அஞ்சலி இவர்கள் அனைவரையும் அணுகியுள்ளதாகவும், அது மட்டும் இல்லாமல் வேறு சில நாயகிகளையும் புக் செய்ய உள்ளார் என்ற தகவல் கசிந்து உள்ளது.

இதில் இன்னொரு சுவாரசியம் என்னவென்றால் சிம்பு இந்த படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளாராம். எல்லா விஷயமும் சரியாக அமைந்தால் இப் படத்தின் ஷூட்டிங் வருகிற அக்டோபர் மாதம் தொடங்கிடும் என்று கூறியுள்ளார்.

 

SHARE