உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளும் போது உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
எந்தவொரு அதிகாரியும் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ளும் போது அவரை விடவும் உயர் அதிகாரியிடம் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்.
அனுமதியின்றி வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு எதிராக எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என அமைச்சர் கெஹலிய தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிற்கு அமைய வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தியாவிற்கு விஜயம் செய்ய அனுமதிக்கப்படுமா என செய்தியாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும், விக்னேஸ்வரனின் இந்திய விஜயத்திற்கு அரசாங்கம் அனுமதியளிக்குமா இல்லையா என்பது பற்றி கெஹலிய எதனையும் குறிப்பிடவில்லை.
– See more at: http://www.tamilwin.net/show-RUmsyJTZKUjsz.html#sthash.kxUjGbUm.dpuf