விசாரணைக்குழுவிற்கு எதிரான பிரேரணை; 134 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

476

parligசர்வதேச விசாரணைக்குழு தொடர்பில் ஆளுங்கட்சி கொண்டுவந்த தீர்மானம் 134 அதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஏற்பாட்டில் சுயாதீன விசாரணை மேற்கொற்வதற்காக விசாரணைக்குழு இலங்கை பயணமாகும் என்று முடிவாகியிருந்தது.

இந் நிலையில் விசாரணைக்குழுவிற்கு எதிராக பிரேரணை ஒன்றை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்றில் கொண்டுவந்திருந்தது.

இது தொடர்பிலான விவாதம் நேற்றும் இன்றும் நடைபெற்றிருந்த நிலையில் இன்று வாக்கெடுப்பு நடைபெற்றிருந்தது. வாக்கெடுப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே எதிர்த்து வாக்களித்திருப்பதாக தெரியவருகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பைச் சேர்ந்த 144 பேர் பிரேரணைக்கு ஆதரவாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் (10 பேர்) பிரேரணைக்கு எதிராக வாக்களித்திருப்பதாகவும் நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, ஐ.தே.க, ஜே.வி.பி, மு.கா ஆகிய கட்சிகள் வாக்கெடுப்பில் பங்கெடுக்கவில்லை என்றும் தெரியவருகிறது.

SHARE