விசாரணைக்கு அழைத்து சென்று 7 பேரை சுட்டுக் கொன்ற ஆந்திர போலீஸ்!; தப்பி வந்த தமிழர் அதிர்ச்சி தகவல்

330

 

 

திருத்தணியில் தமிழக தொழிலாளர்களை கைது செய்த ஆந்திர காவல்துறையினர், பின்னர் அவர்களை வனப்பகுதிக்கு கூட்டிச் சென்று சுட்டுக்கொன்றதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.திருப்பதி சேசாசல வனப்பகுதியில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழர்கள் 20 பேரில் 8 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் போளுரை அடுத்துள்ள வேட்டகிரிபாளையத்தைச் சேர்ந்த பெருமாள், முருகன், சசி, அர்ஜினாபுரத்தைச் சேர்ந்த மகேந்திரன், காளசமுத்திரத்தைச் சேர்ந்த பழனி, முருகப்பாடியைச் சேர்ந்த முனுசாமி மற்றும் மூர்த்தி ஆகிய 7 பேரின் விவரங்கள் தெரிய வந்துள்ளன.கடந்த திங்கள்கிழமை இந்த கிராமங்களில் இருந்து திருப்பதிக்கு இந்த தொழிலாளர்கள் சென்றுள்ளனர். தமிழக எல்லைப் பகுதியான திருத்தணில் பேருந்தில் சென்றுகொண்டிருந்த அவர்களை போலீசார் கைது செய்ததாகவும், பின்னர் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று திட்டமிட்டு கொலை செய்ததாகவும் அவர்களது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அர்ஜினாபுரத்தில் உள்ள மகேந்திரன் குடும்பத்தினர் இந்த குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர். மகேந்திரன் சகோதரர் மற்றும் அவரது தாயார் கூறுகையில்,

திங்கள்கிழமை இரவு 7 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. திருத்தணியில் இருந்து 15 நிமிடம் சென்ற பேருந்தில் இருந்து ஆந்திர போலீசார் அவர்களை இறக்கியுள்ளனர். தப்பி வந்த ஒருவர் இதனை எங்களிடம் தெரிவித்தார்.

மகேந்திரன் சென்னையில் பிளம்பர் வேலை செய்கிறார். வேலை நிமித்தமாகத்தான் சென்றார். உண்மையிலேயே அவர் கடத்தலில் ஈடுபட்டு சுட்டுக்கொன்றால் அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். அதுவரை நாங்கள் விடமாட்டோம் என்றனர்.

SHARE