விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் யாழில் தொடர்கின்றது கைது!

282

நீதிமன்ற சூழலில் இடம்பெற்ற வன்முறைகளை தொடர்ந்து தொடரும் கைது நடவடிக்கையின் தொடர்ச்சியாக இன்றும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினாலேயே இவர்கள் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்.நகர், வண்ணார்பண்ணை, மற்றும் நாவாந்துறைப் பகுதியினைச் சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 4 பேரும் யாழ்.நீதிமன்ற வளாகத்திற்கு அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்டமைக்காக வீடியோ ஆதாரம் தம்மிடம் உள்ளதாகவும், சாட்சியமாக குறித்த வீடியோ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே தபாலக பணியாளர் உள்ளிட்ட சிலர் கைதாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE