விஜயதாசவை நீக்குங்கள்: ஜனாதிபதியிடம் மொட்டுக் கட்சி மீண்டும் கோரிக்கை

110

 

விஜயதாச ராஜபக்சவை(Wijeyadasa Rajapakshe) அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி (Sri Lanka Podujana Peramuna) மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.

விஜயதாச ராஜபக்ச எதிரணி அரசியல் நடத்துகின்றோம் எனக் கூறும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதாலும், அக்கட்சியில் பதவியை ஏற்றதாலும் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் கோரிக்கை
இந்நிலையில் விஜயதாசவுக்குப் பதிலாக அமைச்சரவைக்குள் தம்மிக்க பெரேராவை உள்வாங்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி அமைச்சரவையை மறுசீரமைத்தால் நீதி அமைச்சு பதவி சுசில் பிரேமஜயந்தவுக்கும், கல்வி அமைச்சு தம்மிக்க பெரேராவுக்கும் வழங்கபடக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

SHARE