விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் நடித்த கிருஷ்ண திவாகரா இது?

11

 

இளைய தளபதி விஜய் கடைசியாக அவரது நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி இருந்தது. அடுத்து வம்சி இயக்கத்தில் விஜய் தனது 66வது படத்தில் நடித்து வருகிறார்.

படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்க படத்தில் நடிக்க இருப்பவர்களின் விவரங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

ஷாஜகான் பட நடிகர்

விஜய்யின் திரைப்பயணத்தில் மிகவும் ஹிட்டடித்த படங்களில் ஒன்று ஷாஜகான். கே.எஸ்.ரவி இயக்கிய இப்படம் 2001ம் ஆண்டு வெளியாகி இருந்தது. இதில் விஜய்யின் நண்பராக முக்கிய வேடத்தில் நடித்தவர் கிருஷ்ணா திவாகர்.

இவர் அண்மையில் தனது பயணம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் பேசும்போது, விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் நடித்திருந்தேன். அப்படத்திற்கு கிடைத்த வெற்றி எனக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தன.

விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் நடித்த கிருஷ்ண திவாகரா இது?- அவரது தற்போதைய நிலை என்ன தெரியுமா?

ஆனால் அப்போது எனக்கு படிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் சினிமா பக்கம் வரவில்லை. இப்போது மலையாள படங்களில் நடித்து வருகிறேன். தமிழில் வாய்ப்புகள் கிடைப்பது இல்லை, அந்த நேரத்தில் விஜய்யை சந்திக்க முயற்சி செய்தேன்.

அவரது செக்யூரிட்டியிடம் நான் விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் நடித்தவர் என்று கூறியபோது, அவர் பீஸ்ட் விஜய் இப்போது என்றார்கள்.

நான் அதற்கு பிறகு விஜய்யை சந்திப்பது கடினம் என நினைத்தேன்.

வருங்காலத்தில் கண்டிப்பாக நான் விஜய்யை சந்திப்பேன், தமிழில் படங்கள் நடிப்பேன் என கூறியுள்ளார்.

SHARE