விஜய்யை பின்னுக்கு தள்ளிய மகேஷ் பாபு! சர்க்காரு வாரி பாட்டா முதல் நாளில் இமாலய வசூல்

205

 

மகேஷ் பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா படம் நேற்று உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது. ஆனாலும் படம் சுமார் என்ற விமர்சனம் தான் வந்துகொண்டிருக்கிறது.

மகேஷ் பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்து இருக்கும் இந்த படம் வழக்கமான அதே பார்முலாவை பின்பற்றி எடுத்திருக்கிறார்கள் என பல விமர்சகர்கள் கூறி உள்ளனர்.

முதல் நாள் வசூல்
விமர்சனங்கள் எப்படி வந்தாலும் முதல் நாளில் சர்க்காரு வாரி பாட்டா படம் இமாலய வசூல் ஈட்டி இருக்கிறது. இந்த படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 75 கோடி ருபாய் வசூலித்து இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளனர்.

விஜய்யின் பீஸ்ட் படம் முதல் நாளில் 72 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்படும் நிலையில், தற்போது மகேஷ் பாபு படம் அதனை விட அதிகமாக வசூல் செய்திருக்கிறது.

மேலும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் முதல் நாளில் 36.63 கோடி ருபாய் ஷேர் கிடைத்து இருக்கிறது. பகுதி வாரியாக முழு விவரம் இதோ..

Nizam- 12.24cr
Ceeded- 4.7cr
UA- 3.73cr
East- 3.25cr
West- 2.74cr
Guntur- 5.83cr
Krishna- 2.58cr
Nellore- 1.56cr
AP&TS Day1 Share: 36.63Cr

SHARE