விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவின் வெற்றிப்பட நாயகனாக வலம் வருகின்றார். இவர் அடுத்து கிருத்திகா உதயநிதி படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தின் வேலைகள் தொடங்கிய நிலையில் நீண்ட நாட்களாக ஹீரோயின் தேடல் நடந்து வந்தது.
தற்போது வந்த தகவலின்படி இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க சுனைனா கமிட் ஆகியுள்ளாராம்.
இதுக்குறித்து சுனைனா கூறுகையில் ‘விஜய் ஆண்டனியுடன் நடிப்பது மிகவும் சந்தோஷம், இதில் மேலும், 3 நாயகிகள் உள்ளனர்.
இதில் ஒரு நாயகியாக நடிக்கவுள்ளேன், என் கதாபாத்திரம் குறித்து தற்போதைக்கு பேசமுடியாது’ என்று கூறியுள்ளார்.