விடுதலைப்புலிகளின் ஆயுத விமானத்திற்கு நடந்தது என்ன???

401

கேர்ணல் பாணு காட்டிக் கொடுத்தார் என புலித் தலைமைகளிடம் சந்தேகம் உருவாகியது. கேர்ணல் பாணு இலங்கை அரசுக்கெதிராக நடைபெற்ற தாக்குதல்களில் பல்வேறு வெற்றிகளை குவித்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

leaders-and-skytigers-6

 

இவர் ஏன் விடுதலைப்புலிகளின் விமானம் இரணைமடு ஓடுபாதையில் இறங்குவது தொடர்பான விடயத்தை இலங்கை அரசிற்கு வழங்கும் அளவிற்கு என்ன தேவை ஏற்பட்டது. இந்த விடயம் விடுதலைப்புலிகளின் ஏனைய உயர்மட்ட தலைவர்களுக்கு தெரியவர பாணுவின் செயற்பாடுகள் பொட்டு அம்மானால் தொடர்ந்தும் அவதானிக்கப்பட்டு வந்தது. அதே நேரம் இலங்கை இராணுவத்தின் 57 வது டிவிசன் டிசம்பர் முதலாம் திகதி அக்கராயன்குளத்தை கடந்து ஏ9 வீதியையும் கடந்து கொக்காவில் பகுதியைக் கைப்பற்றியது மற்றுமொரு படைப்பிரிவான 58 டிவிசன் 8ம் திகதி முரசுமோட்டையை கைப்பற்றியது. இந்த இரு இடங்களுக்கும் நடுவேதான் விடுதலைப்புலிகளின் விமான ஓடுபாதை அமைந்திருந்தது.

air3

பொட்டு அம்மானின் ஒவ்வொரு செயற்பாடுகளும் ஏதோ ஒருவிதத்தில் இராணுவ புலனாய்விடம் சிக்கிக் கொள்கிறது. இறுதி நேரத்தில் தனக்காக பொட்டு அம்மான் திறம்படவே செயற்படுவார் என நினைத்து பிரபாகரன் அனைத்துப் பொறுப்புக்களையும் பொட்டு அம்மானிடம் வழங்குகின்றார். ஏனைய தளபதிகளை இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பிரபாகரன் முழுமையாக நம்பவில்லை.

விடுதலைப்புலிகள் 9 கிபிர் விமானங்களை வைத்திருக்கிறார்கள் என்ற வதந்தியும் யுத்தத்தின் நடுவே பரப்பப்பட்டது. இறுதி நேரத்தில் விடுதலைப்புலிகள் விமானம் மூலம் தாக்குதலை தொடுத்து வெற்றி பெறுவர் என உள்நாட்டு வெளிநாட்டு இராஜதந்திரிகள் கருத்து வெளியிட்டிருந்தனர். அதே சமயம் விடுதலைப்புலிகளின் இரு விமானம் கொழும்பு கொம்பனித்தெரு பகுதியிலும் மற்றயது இலங்கை விமான நிலையத்திற்கு அருகேயும் சுட்டு வீழ்த்தப்பட்டன.

LTTEairraid_8

 

இதுவே விடுதலைப்புலிகளின் உயரப்பறந்து தாக்கிய இறுதிச் சந்தர்ப்பமாகும். இதனையடுத்து எந்தவிதமாக தாக்குதலும் நடத்தப்படவில்லை. கேர்ணல் பாணுவை சந்தேகித்த பொட்டு அம்மான் அவர் தொடர்பான தகவல்களை நேரடியாக விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு தெரிவித்தார்.

unnamed-681 unnamed-691

அதன் பிற்பாடு அவசர அவசரமாக கேர்ணல் பாணுவை கோம்பாவில் பகுதிக்கு விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட புலனாய்வு பிரிவினரால் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். இந்த விசாரணையின் போது கேர்ணல் பாணு நிரபாரதி என அறிவிக்கப்பட்டார். மீண்டும் கேர்ணல் பாணுவை போர்முனைக்குச் சென்று போராடுமாறு பொட்டு அம்மானால் உத்தரவு பிரப்பிக்கப்பட்டது.

உக்ரைன் ஆயுத வியாபாரி ஒருவர் இலங்கை புலனாய்வுத்துறைக்கு முற்கூட்டியே தகவல் கொடுத்து அன்று அதிகாலை இரணைமடு ஓடுபாதையின் அருகே புலிகளின் உளவுப்பிரிவு முக்கியஸ்தர்கள் காத்திருக்க வாய்ப்பிருக்கிறது. சரியாக 4 மணியிலிருந்து 4.30 மணிக்குள் தொடர்ந்து தாக்குதல் நடாத்தினால் விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் கொல்லப்படுவார்கள் என்று உக்ரைன் நாட்டு வியாபாரி இலங்கை புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கொடுக்க சரியாக அதேநேரம் இலங்கை விமானப்படை தாக்குதலை நடாத்தியிருந்தது.

யுத்தத்தில் புலிகள் தோல்வியடைந்தது ஏனென்று பலரும் பல காரணங்களை கூறினாலும் திரை மறைவில் நடைபெற்ற இது போன்ற சம்பவங்கள் தான் முக்கிய காரணம் என தெரியப்படாத உண்மையாக உள்ளது.

இந்த விஷயங்கள், நடவடிக்கைகள் தெரிந்த ஒருவர் மட்டும் தற்போது உயிருடன் உள்ளார். 2002ம் ஆண்டின் பின் கே.பியிடமிருந்து ஆயுதக் கொள்வனவுக் கப்பல் போக்குவரத்துக்கு கைமாறி இறுதி யுத்தம் முடியும் வரை வன்னிக்குப் போய் சேர்ந்த ஆயுதங்கள் மொத்தமாகவே 25000 தொன் அதாவது 25000 கிலோ மட்டுமே 2002ற்கு முன் புலிகள் யுத்தத்தில் வெற்றிபெறும் முகமாக மாதம் ஒன்றுக்கு 25 தொன் ஆயுதங்கள் கிடைத்த காலங்களும் உண்டு.

ஆயுதம் வாங்குவதும் அதை திருப்பி அனுப்பி வைப்பதும் விடுதலைப்புலிகளுக்கு ஒரு கலை 2002ற்கு பின் விடுதலைப் புலிகளுக்கு வந்த ஆயுதக் கப்பல்களில் ஒரு சில கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்ட ஒரு சில கப்பல்கள் வந்து சேர்ந்தன. நடந்தேறிய சம்பவங்கள் வெளியாகும் போது தான் அதனுடைய உண்மை வெளிவருகிறது.

தோல்விக்கான காரணங்களை புரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் புரிந்து கொள்வார்கள் புரிந்து கொள்ள முடியாதவபர்களுக்கு எதைச் சொல்லியும் புரிந்து கொள்ளப் போவதில்லை, நம்பவைக்க வேண்டிய அவசியமும் யாருக்கும் இல்லை. அப்படியானவர்கள் ஒரு ஐந்து வருடங்களுக்கு பின்னோ பத்து வருடங்களுக்கு பின்னரோ புரிந்து கொள்வார்கள். கடற்புலிகளின் தலைவர் சூசையின் ஆயுதக் கப்பல்கள் ஒன்றன் பின் ஒன்றாக அடிபட அதன் பின்னணியில் பல உண்மை விஷயங்கள் உள்ளன.

சூசையின் கப்பல் விஷயத்தில் நம்பிக்கை இழந்த பொட்டு அம்மான் விமானம் மூலம் ஆயுதங்கள் இறக்க திட்டமிட்டிருந்தார். அதை செயற்படுத்தியும் இருந்தார். ஆனால் பொட்டு அம்மானால் இலங்கைக்கு ஆயுதம் அனுப்பப்பட்ட ஆயுத விமானமும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் தரையிறங்கவில்லை.

அப்படியானால் பொட்டு அம்மானின் புலனாய்வுத் துறையினரின் தவறே ஆகும். ஆனால் இதன் பின்னணியில் மறைமுகமாக குமரன் பத்மநாதன் என அழைக்கப்பட்ட கே.பி இவர் விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆயுதக் விற்பனைகளில் தலை சிறந்த ஒருவராவார். ஆனால் இவரின் மறைமுகமான செயற்பாடுகள் இறுதி நாட்களில் விடுதலைப்புலிகளுக்கு எதிரானதாகவே இருந்தது. என பல இராஜதந்திரிகள் தெரிவித்தனர்.
முற்றும்
-நெற்றிப்பொறியன்-

SHARE