கொழும்பில் ஜனாதிபதித் தேர்தல் பதாகைகள் பலவும் இன்னமும் அகற்றப்படாத நிலையில் சில முக்கிய இடங்களில் அகற்றப்பட்ட தேர்தல் பதாகைகளுக்குப் பதிலாக தெற்கில் நடந்த குண்டுத்தாக்குதல் காட்சிகள் கெண்ட புதிய பதாகைள் இன்று பொருத்தப்பட்டுள்ளன.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையம், தலாதா மாளிகை உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் காட்சிகள் கொண்ட பதாகைகளை கொழும்பின் பல்வேறு பகுதியிலும் காணக்கூடியதாக உள்ளதாக எமது செய்தியாளர் கூறுகிறார்.
இந்தப் பதாகைகளில் யுத்த வெற்றி குறித்தும் விடுதலைப் புலிகளை தோற்கடித்தமை குறித்த வரிகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் எழுதப்பட்டுள்ளன. ஜனாதிபதித் தேர்தலில் வாக்கை பெறும் நோக்கிலேயே இவை வைக்கப்பட்டுள்ளன.
குறித்த தாக்குதல்களை நினைவுபடுத்தி விடுதலைப் புலிகளை அழித்தமையை நினைவுபடுத்தி வாக்கு கோரும் இறுதி இந்தப் பதாகைகளும் மிகவும் தாக்கத்தை செலுத்தும் தேர்தல்கால பதாகைகள் என்று தெரிவிக்கப்படுகின்றன.
இதேவேளை இலங்கை அரச ஊடகங்களில் தொடர்ந்தும் யுத்த வெற்றிக் காட்சிகள் ஒளிபரப்பபட்டு வருகின்றன. குறித்த இந்த காலத்தில் தேர்தல் பிரசார நோக்கில் எந்த நிகழ்ச்சியும் ஒளிபரப்ப அனுமதியற்ற மௌன காலமாகும்.
எனினும் இலங்கை அரசின் ஊடகங்களில் தொடர்ந்தும் பல்வேறு வியூகங்களில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தொடர்வதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.