விடுதலைப் புலிகள் பயிற்சி பெற்றதாக கூறப்படும் சேலம் மாவட்டம்,

605
புலிகள் பயிற்சி பெற்ற கொளத்தூர் வனப் பகுதியில் அதிரடிப் படையினர் ஆய்வு
விடுதலைப் புலிகள் பயிற்சி பெற்றதாக கூறப்படும் சேலம் மாவட்டம், கொளத்தூர் வனப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஆள்கள் நடமாட்டம் உள்ளதா என்பது குறித்து தமிழக அதிரடிப் படையினர் நேற்று வியாழக்கிழமை ஆய்வு நடத்தினர்.
ellalan01

மேட்டூரை அடுத்துள்ள கொளத்தூரில் கும்பாரப்பட்டியில் உள்ள பச்சைபாலமலை வனப் பகுதியில் கடந்த 26-ஆம் தேதி வனத் துறையினர் மரக் கன்றுகள் நடுவதற்காக குழி தோண்டிய போது கண்டெடுக்கப்பட்ட பெரலில் கையெறி குண்டுகள், ஆயுதப் பொருள்கள் கிடைத்தன.

இந்த நிலையில், அந்தப் பகுதியில் ஆள்கள் நடமாட்டம் உள்ளதா என்பது குறித்து தமிழக அதிரடிப் படையினர் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.

பச்சைபாலமலை பகுதியில் விடுதலைப் புலிகள் தங்கியிருந்த போது துப்பாக்கி பயிற்சிக்கு பயன்படுத்திய சுவர்களை மர்ம நபர்கள் சிலர் இடித்துத் தள்ளினர்.

மேலும், அந்தப் பகுதியில் உள்ள ஓரிடத்தில் நான்கு கல்கள் அடுக்கப்பட்டு அதில் விளக்கு ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் தளபதி ரோய் நினைவிடம் என எழுதப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிரடிப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி- விடுதலைப் புலிகளுக்கு பயிற்சி வழங்கிய முகாம் கொளத்தூரில் இயங்கியதாம்? தோண்ட தோண்ட வெடிகுண்டுகள்!

salem bomb

 

SHARE