வித்தியாவின் படுகொலை வழக்கு பொதுவான சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வந்தது. தற்போது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவு பிறப்பித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வித்தியா கொலை வழக்கு! கொலையாளிகளை கண்டுபிடிக்குமா?

206
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையானது ஒரு தனிப்பட்ட விடயம் அல்ல, அது சமூகத்திற்கு எதிரான கொலையென சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராஜா தெரிவித்துள்ளார்.
pungudutivu-vithya-720x480

வித்தியாவின் படுகொலை வழக்கு பொதுவான சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வந்தது. தற்போது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த மாற்றமானது கொலை குற்றவாளிகளை விரைவில் இனங்காண வாய்ப்பை ஏற்படுத்தும் என சிரேஷ்ட சட்டத்தரணி லங்காசிறி 24 செய்திச் சேவைக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டம் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டது என்ற வகையில் அதனை நிராகரிப்பதாக சிரேஷ்ட சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார். எனினும் வித்தியா கொலை வழக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டமையானது சாதக தன்மைகளை ஏற்படுத்தும் என்பதால் அதனை ஆதரப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE