வித்தியா கொலையாளிகளுக்காக அலுகோசு பதவியை ஏற்றுக்கொள்ளத் தயார்!– சமித தேரர்

150

புங்குடுதீவில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் கொலையாளிகளை தண்டிக்க அலுகோசு பதவியை ஏற்றுக்கொள்ளத் தயார் என தென் மாகாணசபை உறுப்பினர் பெத்தேகம சமித தேரர் தெரிவித்துள்ளார்.

Swiss-Kumar-1

தென் மாகாணசபையில் நேற்று நடைபெற்ற அவர்வின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிள்ளைகளுக்காக அலுகோசு பொறுப்பினை ஏற்றுக்கொண்டு, காவி உடையை துறந்து மீண்டும் காட்டுக்கு சென்று தியானம் செய்வேன்.

நான் ஓர் பௌத்த பிக்கு, நாம் யாரையும் குரோதமாக நினைப்பதில்லை.

எமது நாட்டில் தூக்குத்தண்டனை அமுல்படுத்தப்படுவதில்லை.

தூக்குத்தண்டனை நிறைவேற்ற அலுகோசுக்கள் நியமிக்கப்பட்டாலும் அவர்கள் அந்தக் கடமையை ஆற்ற விரும்புவதில்லை. விலகிச் செல்கின்றார்கள்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் கொலை செய்யப்பட்ட மாணவியின் கொலையாளிகளுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தால், பிள்ளைகளின் நாமத்தில் அலுகோசு பதவியை ஏற்றுக்கொண்டு கொலையாளிகளை தண்டிக்கத் தயார்.

நீதிமன்றம் தண்டனை விதித்தால் நிச்சயமாக நான் அலுகோசு பதவியை ஏற்றுக்கொள்வேன்.

அதன் பின்னர் எனது உயிர் பிரிந்தாலும் பரவாயில்லை.

யாழ்ப்பாணத்திற்கு சென்ற ஜனாதிபதி விசேட நீதிமன்றின் ஊடாக வித்தியா வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படும் என உறுதியளித்திருந்தார்.

இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது என பெத்தேகம சமித தேரர் தெரிவித்துள்ளார்.

SHARE