வித்தியா கொலைவழக்கு! நீதிமன்றில் தாய் மற்றும் அண்ணன் மயங்கி விழுந்தனர். மயங்கிவிழுந்த வித்தியாவின் அண்ணன் வைத்தியசாலையில் அனுமதி!

217
யாழ்.ஊர்காவல்துறை நீதிமன்றில் தற்போது நடைபெற்றுவரும் வித்தியா கொலை வழக்கு விசாரணையில் சாட்சியமளித்த அவரது தாயார் சரஸ்வதி சுகயீனம் காரணமாக நீதிமன்றத்திற்குள் மயங்கி விழுந்துள்ளார்.
vithya-mother

தற்போது மிகவும் பரபரப்பாக மிக நீண்டநேரமாக நடைபெற்றுவரும் வித்தியா கொலை வழக்கு விசாரணையில், வித்தியாவின் தாய் மற்றும் அண்ணன் ஆகியோரின் சாட்சியங்கள் நீதிபதி லெனின்குமார் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.

இன்றைய அமர்வில் 9 சந்தேகநபர்களும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன் வித்தியா சார்பாக பல மனிதவுரிமைகள் சட்டத்தரணிகள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றிற்குள் மயங்கிவிழுந்த வித்தியாவின் அண்ணன் வைத்தியசாலையில் அனுமதி!

யாழ்.ஊர்காவல்துரை நீதிமன்றில் தற்போது நடைபெற்றுவரும் வித்தியா கொலைவழக்கு விசாரணையில் சாட்சியமளித்த அவரது தாயார் சரஸ்வதி சுகயீனம் காரணமாக நீதிமன்றத்திற்குள் மயங்கி விழுந்ததுடன் வித்தியாவின் அண்ணனான நிசாந்தனும் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வித்தியாவின் கொலைக்குப் பின்னர் அவரது அண்ணன் உளவியல் ரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று நீதிமன்றத்தில் மயங்கிவிழுந்துள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர்.

SHARE