வித்தியா கொலை தொடபில் நான்கு மயிர்களை தடையமாக நீதிமன்றிற்கு சமர்ப்பித்த பொலிஸ்

355

 

 யாழ் தட­ய­வியல் பொலிஸ் பிரிவின் சார்­ஜ­ன் றொசான் சில தட­யங்­களை மன்றில் முன்­வைத்து சாட்­சி­ய­ம­ளித்தார்.

2015.05.14 அன்று ஊர்­கா­வற்­றுறை தலைமை பொலிஸ் நிலை­யத்தில் இருந்து தொலை­பேசி அழைப்புவந்­தது.

10ம் வட்­டாரம் ஆல­யடி சந்தி புங்­கு­டு­தீவு என்ற முக­வ­ரியில் பெண் ஒருவர் கொலை செய்­யப்­பட்டுள்ளதா­கவும் அது தொடர்பில் பரி­சோ­த­னை­களைச் செய்­யு­மாறும் எமக்கு தகவல் அளிக்­கப்­பட்­டது.

சுமார் 8.30 மணி­ய­ள­வி­லேயே எமக்கு அந்தத் தகவல் கிடைத்­தது நானும் எனது மேலும் இரு உத்தியோகத்­தர்­களும் 61-7526 என்ற ஜீப் வண்­டியில் ஸ்தலத்­திற்குச் சென்றோம்.

அங்கு சென்ற நான் 9.30 முதல் 11.55 வரை சடலம் இருந்த இடத்­தினில் பரி­சோ­தனை செய்தேன் நான் அங்கு செல்­லும்­போது மழை­யுடன் கூடிய கால­நிலை அங்கு காணப்­பட்­டது. குற்றம் இடம்­பெற்ற இடத்தில் ஊர்­கா­வற்­றுறை தலைமைப் பொலிஸ் பரி­சோ­த­கரும் இருந்தார்.

18 வய­து­டைய வித்­தியா என்னும் பாட­சலை மாண­வியே வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக சந்­தே­கிப்­ப­தாக அவரே அப்­போது அவ்­வி­டத்தில் வைத்து என்­னிடம் கூறினார்.

சட­ல­மா­னது நான் செல்­லும்­போது கறுப்­பு­நிலை பொலித்தீன் பையினால் மூடப்­பட்­டி­ருந்­தது. அங்கு யாழ் சட்ட வைத்­திய அதி­கா­ரியும் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்தார்.

நானும் என்­னுடன் வந்த உத்­தி­யோ­கத்­தர்­களும் சம்­பவ இடத்தை முற்­றாகப் பரி­சோ­தித்தோம். சம்­பவம் இடம்­பெற்ற இட­மா­னது புங்­கு­டு­தீவு ஆலை­யடி சந்­தி­யி­லி­ருந்து 400 மீற்றர் தூரத்தில் குமா­ர­சாமிப் பிள்ளையார் கோவி­லுக்கு திரும்பும் சந்­தியில் இடது புறத்தில் காடு­களால் சூழப்­பட்ட இடம் காணப்பட்டது.

Vithiya-03பாதையின் இரு புறத்­திலும் 150 மீற்றர் வரை பற்­றைக்­கா­டுகள் அடர்ந்து பாழ­டைந்­தி­ருந்­தன. பாதையிலி­ருந்து 7 மீற்றர் தூரத்­தி­லியே குற்­றப்­பி­ர­தேசம் இருந்­தது.

எனினும் பாதையில் இருந்து பார்த்தால் காடுகள் வளர்ந்­தி­ருந்­த­மையால் அந்த இடம் தெரி­யாது. நான் ஒற்­றை­யடிப் பாதை ஊடாக குற்றம் இடம்­பெற்ற இடத்­திற்குச் சென்றேன் அந்த இடத்தில் பனைமரங்கள் காணப்­பட்­டன. அல­ரி­ம­ரங்­களும் இருந்­தன.

viber-image-300x225
அந்த இடம் இருள் சூழ்ந்­தி­ருந்­தது. அந்தப் பின்­ன­ணி­யி­லேயே சடலம் நிர்­வா­ண­மாக காணப்­பட்­டது. (இதன்­போது குறுக்­கிட்ட நீதிவான் சடலம் காணப்­பட்ட விதத்தை குறிப்பிடு­வதைத் தவிர்த்து தட­யத்தை சேக­ரித்­ததை மட்டும் கூறு­மாறு தெரி­வித்தார்)

கையுறை ஒன்­றுடன் நான் சட்ட வைத்­திய அதி­கா­ரி­யுடன் இணைந்து சட­லத்தை பரி­சோ­தனை செய்ய ஆரம்­பித்தேன் அதன்­போது அந்தப் பெண்ணின் இடது புற மார்பில் பெண் ஒரு­வரின் அல்­லாத உரோமங்கள் இரண்டு இருந்­தன அவ் இரண்டு உரோ­மங்­க­ளையும் வெவ்­வே­றாக இட்டு 135/2015 என பதிவு செய்து சாட்­சி­ய­மாக மன்­றிடம் சமர்ப்­பிக்­கிறேன்.

இவற்றை அரச இர­சா­யனப் பகுப்­பாய்­வுக்கு அனுப்பி டிஎன்ஏ பரி­சோ­த­னை­யுடன் ஒப்­பிட்டுப் பார்க்­க­வேண்டும். என்றார்.

vinthan_vidyahome_003பொலிஸ் கான்ஸ்­ரபிள் துசார சாட்­சியம்

இத­னை­ய­டுத்து யாழ் தட­ய­வியல் பிரிவின் பொலிஸ் கான்ஸ்­ட­பி­ளான 28 வய­து­டைய துசார என்­பவர் சாட்­சி­ய­ம­ளித்தார்.

இந்தக் குற்றம் தொடர்பில் சந்­தே­க­ந­பர்கள் வாக்­கு­மூலம் அளித்­துள்­ள­தன்­படி குற்றம் இடம்­பெற்ற இடத்தை சோதனை செய்யும் பணி ஊர்­கா­வற்­றுறை தலைமைப் பொலிஸ் நிலையம் ஊடாக எமக்கு வழங்­கப்­பட்­டது.

அதன்­படி தலைமைப் பொலிஸ் பரி­சோ­தகர் வீர­சூ­ரி­யவின் ஆலோ­ச­னை­யின்­படி குலேந்­திரன் ஜனனி றொசான் ஆகிய எனது சக உத்­தி­யோ­கத்­தர்­க­ளுடன் 61-7526 என்ற ஜீப் வண்­டியில் குற்றம் இடம்­பெற்ற இடத்­திற்குச் சென்றோம். றொசானே வண்­டியைச் செலுத்­தினார்.

vinthan_vidyahome_002அங்கு சென்­ற­போது சந்­தே­க­ந­பர்கள் வழங்­கிய வாக்­கு­மூ­லத்­திற்கு அமைய வரை­யப்­பட்ட வரை­படம் ஒன்று அப்­போது விசா­ர­ணை­களை செய்­து­வந்த உப பொலிஸ் பரி­சோ­தகர் ஹிரா­னினால் எமக்கு வழங்­கப்­பட்­டது அந்தப் படத்­திற்கு அமை­வாக நாம் சோத­னை­களை ஆரம்­பித்தோம்.

நாம் அவ்­வாறு பரி­சோ­த­னை­களை ஆரம்­பிக்­கும்­போது குற்றம் இடம்­பெற்று 5 நாட்கள் கடந்­தி­ருந்­தன.

நாம் பரி­சோ­த­னை­களை ஆரம்­பிக்­கும்­போது சீரற்ற கால­நி­லையே காணப்­பட்­டது. குற்றம் இடம்­பெற்ற இடத்தில் ஒரு பாழ­டைந்த கட்­ட­டமும் இருந்­தது அந்தக் கட்­ட­டத்­திற்கு கூரை இருக்­க­வில்லை.

அந்த இடத்­திலும் நாம் பரி­சோ­த­னை­களை நடத்­தினோம் செங்­கல்லால் கட்­டப்­பட்­டி­ருந்த அந்தப் பாழ­டைந்த கட்­டி­டத்தில் இருந்து 400 மீற்றர் தூரத்தில் பூவ­ரசம் மரங்கள் இரண்டு இருந்­தன.

அந்தப் பகு­தி­யிலும் நாம் சோதனை செய்தோம். எங்­க­ளுக்கு கிடைக்­கப்­பெற்ற வரை­ப­டத்­தின்­ப­டியே இந்த சோத­னைகள் இடம்­பெற்­றன.

பாழ­டைந்த வீட்டின் அத்­தி­பாரப் பகு­தியில் உரோ­மங்கள் சிலதை நாம் அவ­தா­னித்தோம் அதனை இலக்கம் 1 என நான் அடை­யா­ளப்­ப­டுத்­தினேன் இலக்கம் 1 இலி­ருந்து இடப்­பக்­க­மாக மேலும பல ரோமங்கள் இருந்­தன அதனை இலக்கம் 2 என அடை­யா­ள­மிட்டேன்.

தொடர்ந்து சோனை செய்­யபின் இலக்கம் 2க்கு இடப்­பு­றத்தில் மேலும் உரோ­மங்­களை நான் அவதானித்தேன் அதனை இலக்கம் 3 என அடை­யா­ள­மிட்டோம்.

இலக்கம் 3 இலி­ருந்து இடது புற­த­தி­லி­ருந்த செங்­கற்­ற­காளல் எழுப்­பப்­பட்­டி­ருந்த சுவரில் சிலந்தி வலைகள் இருக்க அத­ன­ருகே மேலும் ஒரு உரோமம் இருந்­தது.

அதனை இலக்கம் 4 என அடை­யா­ள­மிட்டோம். அந்த தட­யங்­களை வெவ்­வே­றாக அடை­யா­ளப்­ப­டுத்தி இன்று உங்கள் முன் சமர்ப்­பிக்­கிறேன்.

இந்தத் தடை­யங்­களை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தி சந்தேகநபர்களினுடைய இரத்த மாதிரிகளுடன் ஒப்பிட்டு விசாரணை செய்ய முடியும் என யோசனை செய்கிறேன் என்றார்.

இதனையடுத்து வித்தியா கொலை தொடர்பிலான விசாரணைகளின் தற்போதைய நிலை குறித்து நீதிவான் குற்றப் புலனாய்வு பிரிவினரை வினவினார்.

சந்தேக நபர்களின் தொலைபேசி இலக்கங்கள் தற்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களது வாக்குமூலங்களில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் அவற்றின் உண்மைத் தன்மை தொடர்பிலும் தற்போது விசாரிப்பதாக புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நிசந்த டி சில்வா நீதிவானிடம் தெரிவித்தார்.

இந்தப் பதிலையடுத்து சந்தேக நபர்கள் ஏதேனும் கூறவிரும்புகின்றனரா என நீதிவான் கேட்டபொழுது,

அவர்களில் ஒருவர் தனக்கும் இந்த மிலேச்சத்தனமான செயலுக்குமிடையே எவ்விதத் தொடர்பும் இல்லை எனவும் சம்பவ தினம் தான் கொழும்பில் இருந்தாகவும் குறிப்பிட்டார்.

இவ்வேளையில், அது தொடர்பில் தற்போது புலனாய்வுப் பிரிவின் விசாரணைகள் நடத்தி வரும் நிலையில் அவ்வாறு கொழும்பில் இருந்ததற்கான சாட்சியங்கள் இருப்பின் அதனை இவ்வழக்கு மேல் நீதிமன்றுக்கு மாற்றப்படும்போது அங்கு முன்வைக்க முடியும் எனவும் சந்தேக நபர்கள் அடுத்து வரும் தவணைகளில் சட்டத்தரணிகளை வைத்து தமது தரப்பு நியாயங்களை முன்வைக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து ஒன்பது சந்தேகநபர்களையும் எதிர்வரும் யூன் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான் லெனின் குமார் அன்றைய தினம் வித்தியாவின் மரண விசாரணைகள் இடம்பெறும் எனவும் அதில் அவரது தாயாரும் சகோதரரும் சாட்சியமளிக்க சமூகமளிக்கும்படியும் குறிப்பிட்டார்.

வழக்கு நிறைவுற்றதன் பின்னர் சந்தேக நபர்கள் மன்றில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் யாழ் சிறைச்சாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

SHARE