வித்தியா கொலை வழக்குபொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவிற்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

230

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான சுவிஸ்குமாரை தப்பிக்க வைக்க உதவியதாக கூறப்படும் சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவிற்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

வித்தியா படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை யாழ். ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது முன்னிலைப்படுத்தப்பட்ட சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தப்பி செல்வதற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் லலித் ஜயசிங்க கடந்த 15ம் திகதி குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்தும் அவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE