வித்தியா கொலை 10வது சந்தேகநபரானநயினாதீவு இளைஞர் விசாரணைகளின் பின் விடுதலை!

323

மாணவி வித்தியா கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பத்தாவது சந்தேகநபரானநயினாதீவு இளைஞர் விசாரணைகளின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Viththiya_Sivaloganathan_109525_200

கொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் இச் சம்பவத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்வைக்கப்பட்டுள்ள நபர் ஒருவருடன் கொலை நடைபெற்ற தினம் அன்று கைத்தொலைபேசியில் உரையாடியிருந்தார் என்ற குற்றச்சாட்டில் நயினாதீவு இளைஞரை கைது செய்திருந்தனர்.விசாரணைகள் முடிவுற்ற நிலையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தேவை ஏற்படின் மீண்டும் அவர் விசாரணைகளுக்கு அழைக்கப்படுவார் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது..

SHARE