விந்தையுலகம் போல் காட்சியளிக்கும் கனடா

376
கனடாவில் ரொறொன்ரோ பெரும்பாகத்தை ஆக்கிரமித்துள்ள கடும் குளிர்கால புயல் மேலும் தொடரும் என்று தெரிவிக்கப்படுள்ளது.பனிப்புயலின் தாக்கத்தினால் ரொறொன்ரோ பெரும்பாகம் ஒரு வித்தியாசமான விந்தையுலகம் போல் காட்சியளிக்கின்றது. பனியினால் மூடப்பட்ட வீதிகளால் போக்குவரத்து ஸ்தம்பித்த நிலைக்குள்ளானது.

பனிக்குழுவினர் நெடுஞ்சாலைகளில் உள்ள பனியை அகற்றி விட்டனர். இருப்பினும் ஏனைய பகுதிகளான வீதிகள், பக்க வீதிகள், மற்றும் நடை பாதைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் பனிகளை முற்றிலும் அகற்ற 14 முதல் 16 மணிநேரம் ஆகலாம் எனக் கருதப்படுகிறது. மேலும் சமீத்திய பனிப்புயல் செலவு 3 மில்லியன் முதல் 5 மில்லியன் டொலர்கள் வரை ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடும் பனிப்பொழிவு செவ்வாய்கிழமை வரை தொடரும் என்றும், இந்த நேரத்தில் மேலதிக பனிப்பொழிவும் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

snowfall_005

SHARE