விபச்சார விடுதியில் பொலிசார் அதிரடி சோதனை: கழிவறைக்குள் ஒளிந்துக்கொண்ட விலை மாதுக்கள்-சுவிஸில் பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கு சட்ட ரீதியாக அனுமதி உள்ளது என்பதுடன், அரசாங்கமே ‘Sex Boxes’ என்று பிரத்தியோகமான இடங்களை கட்டி வைத்துள்ளது.

193

 

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள விபச்சார விடுதி ஒன்றில் பொலிசார் நடத்திய அதிரடி சோதனையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 15 விலை மாதுக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

images

சுவிஸின் பெசில் மண்டலத்தில் உள்ள Kleinbasler Kontaktbar என்ற நகரில் விபச்சார விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது.

விபச்சார விடுதியில் அதிக எண்ணிக்கையிலான விலை மாதுக்கள் இருப்பதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அண்மையில் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர்.

பொலிசார் விடுதிக்குள் நுழைந்துள்ளதை அறிந்த விலை மாதுக்கள் சிதறி அடித்து தப்பி ஓடியுள்ளனர். சிலர் அங்குள்ள ‘வெண்டிலேஷன்’ செல்லும் பாதையில் புகுந்து மறைந்துள்ளனர்.

சிலர், உபயோகமற்ற பொருட்களை அடைத்து வைக்கும் அறையிலும் ஒரு சிலர் கழிவறைக்கு சென்றும் மறைந்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக அனைவரையும் கைது செய்த பொலிசார், அவர்களை நீதி மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

விலை மாதுக்களிடம் நடத்திய விசாரணையில் அவர்களில் சில பேர், பிரேசில், ஹொண்டுராஸ், மொராக்கோ, பெரு, ரோமானியா மற்றும் ஸ்பெயின் நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

மேலும், சுவிட்சர்லாந்தில் தங்குவதற்கும் பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள பெண்களிடம் தகுந்த அனுமதி உள்ளதா என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுவிஸில் பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கு சட்ட ரீதியாக அனுமதி உள்ளது என்பதுடன், அரசாங்கமே ‘Sex Boxes’ என்று பிரத்தியோகமான இடங்களை கட்டி வைத்துள்ளது.

சுவிஸில் பாலியல் தொழிலை தடை செய்ய முடியாது என அரசாங்கம் மறுத்துள்ள நிலையில், விபச்சார விடுதிகளில் பாலியல் தொழிலில் ஈடுப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

SHARE