ஒன்ராறியோ பகுதியில் காணாமல் போன சிறிய விமானம் சுமார் 8 மணி நேரத்திற்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கனடா- ஒன்ராறியோவின் தென்-மத்திய பகுதியில் Cessna 150 விமானம், பிராந்திய விமான போக்குவரத்து கட்டுப் பாட்டாளர்களுடனான தொடர்பை ஹலிபேட்ரனிற்கு அருகில் அதிக மரங்கள் அடர்ந்த பகுதியில் இழந்துள்ளது.
குழப்பமடைந்த விமானி சிறிது நேரத்தின் பின்னர் திங்கள்கிழமை இரவு 8.30 மணியளவில் ஒரு வான்வழி அவசரநிலையை அறிவித்துள்ளார். இந்த விமானத்தை தேடும் வேட்டையில், விமானம் ஒன்றும் ஹெலிகொப்டர் ஒன்றும் தேடுதல் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டது. புதன்கிழமை அதிகாலை 5.30-மணியளவில் காணாமல் போன விமானம் விபத்திற்குள்ளான இடம் கண்டறியப்பட்டது. விற்னி என்ற இடத்திற்கு தெற்கில் சிறிய மலையில் சிதைந்து விழுந்த விமானம் கண்டுபிடிக்கப்பட்டது. கடினமான நிலப்பரப்பான அவ்விடத்திற்கு கார் மற்றும் ஹெலிகொப்படர் போன்றன அணுகமுடியாது. மீட்பு குழுவினரால் ஒரு தொழில்நுட்பவியலாளர் கீழே அனுப்பப்பட்டு அங்கு இருவரது உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பிட்ட விமானம் பட்டன்வில்,ஒன்ராறியோவில் இருந்து புறப்பட்டு பீற்றபொறோ மற்றும் ஒட்டாவா செல்ல இருந்ததென தெரியவந்துள்ளது. விபத்திற்கான காரணத்தை பொலிசார் புலன்விசாரனை செய்து வருகின்றனர். |