விமல் வீரவன்ஸவுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

387

 

10427295_403038763197583_4978232897863110726_n
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ஸவுக்கு எதிரான பாலியல் வன்புணர்ச்சி குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்துமாறு புதிய அரசாங்கம், பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பான பல தகவல்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தனிப்பட்ட ரீதியில் கிடைத்துள்ளன. இது பற்றி உடனடியாக தேடி அறிந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். இதனை தவிர ராஜபக்ச அரசாங்கத்தின் படு பயங்கரமான ஊழல்வாதிகள் எனக் கூறப்படும்,. சஜின்வாஸ் குணவர்தன, ஹட்சன் சமரசிங்க, பிரசன்ன விக்ரமசூரிய, பிரியாத் விக்ரமபதுகே, மகிந்தானந்த அளுத்கமகே, நிஷாந்த ரணதுங்க, காமினி செனரத், ஜாலிய விக்ரமசூரிய, அஜித் நிவாட் கப்ரால், பீ.பி. ஜயசுந்தர, தம்மிக்க பெரேரா, நிமல் பெரேரா, திலித் ஜயவீர, நாலக கொடஹேவா, ரஞ்சித் பிரேமசிறி, தில்ஷான் வி்க்ரமசிங்க, வீலீ கமகே ஆகியோருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பிக்க நாட்டின் முக்கியமான சட்டத்தரணிகள் குழு ஜனாதிபதியின் ஆசியுடன் தயார் நிலையில் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

 

SHARE