விமல் வீரவன்ஸவை கைது செய்யுமாறு கடுவலை மாநகர மேயர் கோரிக்கை

318
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸவுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சட்டத்தை செயல்படுத்துமாறு கடுவலை மாநகர மேயர் ஜீ.எச். புத்ததாச, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

போலிய ஆவணம் தயாரித்தார் என்ற குற்றச்சாட்டில் திஸ்ஸ அத்தநாயக்க கைது செய்யப்பட்டிருப்பதால், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ மற்றும் அவரது மனைவிக்கு எதிராக அந்த சட்டம் ஏன் செயற்படுத்தப்படவில்லை என்ற கேள்வி எழுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடுவலையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

விமல் வீரவன்ஸ, அவரது மனைவி மற்றும் பிள்ளைகளின் பிறப்பத்தாட்சி பத்திரங்களை போலியான முறையில் மாற்றியுள்ளார்.

விமல் வீரவன்ஸவின் மனைவிக்கு அவரை விட வயது அதிகம், இதனால், வீரவன்ஸ தனது வயதை அதிகமாக காட்டும் வகையில் பிறப்புச் சான்றிதழை செய்துள்ளதுடன் மனைவியின் வயதை குறைத்து காட்டும் வகையில் பிரிதொரு பிறப்புச் சான்றிதழை செய்துள்ளார் எனவும் புத்ததாச குறிப்பிட்டுள்ளார்

SHARE