நாட்டில் ஏற்படக் கூடிய அசாதாரன நிலையை உணர்ந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ச சிங்கப்பூர் சென்றுள்ளதாக எமது புலனாய்வுச் செய்தியாளர் லசந்த களபதி அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்
மேலும் கோத்தாபாயவை கைது செய்வதற்காக பல திசைகளிலும் பொன்சேகா முயற்சிப்பதாகவும்
கோட்டபாய ராஜபக்சவைப் பிடித்து ஜெயிலுக்குள் அடைப்பதற்கு சரத்பொன்சேகரா மும்முரமாக ஈடுபட்டுவருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடா்பாக சரத்பொன்சேகரா தனக்கு நெருக்கமானவா்களுடன் கலந்தாலோசித்து வருவதாகவும் பழிக்குப் பழி வாங்கி கோட்டாவை சிறையிலடைப்பதற்கு முயல்வதாகவும் மேலும் அவர் அனுப்பிவைத்துள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்
விமானப்படை விமானத்தில் மனைவியுடன் மாலைதீவுக்கு தப்பிச் சென்றார் கோத்தபாய
தேர்தல் முடிவுகள் வெளியாகி மைத்திரிபால சிறிசேன ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதைத் தொடர்ந்து, சிறிலங்கா அரசின் பாதுகாப்பு அமைச்சு செயலாளராக பதவி வகித்த கோத்தபாய ராஜபக்ச தனது மனைவி அயூமாவுடன் மாலைதீவுக்கு தம்பிச் சென்றுள்ளார்.
இன்று காலை விமானப்படைக்குச் சொந்தமான விமானத்திலேயே அவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை ராஜபக்சவின் பிள்ளைகள் சீனாவிற்குச் சென்றுள்ளார்.
தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகாதபோதும், முடிவுகள் எதிரணி வேட்பாளருக்கு சாதகமாக மாறிக்கொண்டிருந்த சூழ்நிலையில் அவசரகாலச் சட்டததை பிரகடனப்படுத்துவதுடன் தேர்தலையும் இரத்துச் செய்வதற்கு மகிந்த ஆலோசனை செய்ததாகவும், ஆனால் மகிந்தவின் முடிவை ஏற்பதற்கு சட்டமா அதிபர் மறுத்துவிட்டா.
இந்நிலையில், தனது முடிவை மாற்றி அதிகாரத்தை சுமூகமான முறையில் கையளிப்பதற்கு மகிந்த முன்வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் முடிவுகள் வெளியாகுவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு இதுவே காரணம்…
மகிந்தவின் முடிவை அடுத்து கோத்தபாய சிங்கப்பூருக்குச் செல்வதற்குத் திட்டமிட்டிருந்தபோதும் விமானப்படை விமானம் தரையிறங்குவதற்கு அந்நாடு அனுமதி மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எமது புலனாய்வுச் செய்தியாளர் லசந்த களபதி மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்