வியர்வையால் நரக வேதனை அனுபவித்த பெண்: 6 மாத விடுமுறை அளித்த நிறுவனம்

163
பிரித்தானியாவை சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு அதிகமாக வியர்த்துக்கொட்டியதால் 6 மாத விடுமுறையை அவர் வேலை பார்க்கும் நிறுவனம் வழங்கியுள்ளது.பிரித்தானியாவின் பெர்க்ஷயர் மெயிடன்ஹெட் பகுதியை சேர்ந்த எஸ்மி டி சில்வா(25) என்பவருக்கு, உடல் முழுவதும் வியர்ப்பதால், கிண்டல் கேலிகளுக்கு ஆளானார்.அலுவலகத்துக்கு செல்லும் அவர், உடல் முழுவதும் வியர்வையால் நன்றாக நனைந்தபடியே வீட்டுக்கு வருவார்.இதுகுறித்து அவர் கூறியதாவது, இந்த வியர்வை பிரச்சனையால் பலரது கிண்டல்களுக்கு ஆளாகியிருக்கிறேன், இது எனக்கு நரக வேதனையாக உள்ளது.

நன்றாக வேலை பார்க்கும் திறன் எனக்கு இருந்தும்கூட, என்னால், அலுவலக வேலையை சரியாக பார்க்க இயலவில்லை.

எப்போதும், அணிவதற்கு ஒரு செட் சீருடை எனது பையில் வைத்திருப்பேன், ஷொப்பிங் செய்வது என்பது எனது கனவாகவே இருந்தது. கடந்த 1 வருடமாக மருத்துவர்களின் ஆலோசனையை பெற்றுவருகிறேன், இருந்தும் எவ்வித மாற்றமும் இல்லை என்று கூறியுள்ளார்.

தற்போது, இவரின் அக்குள்களில் ஊசி ஏற்றி அடுத்த சிகிச்சையை மருத்துவர்கள் ஆராய உள்ளனர்.

SHARE