தாய்லாந்து நாட்டில் விலை உயர்ந்த வைரக்கல்லை விழுங்கி அதனை குடலில் மறைத்துக்கொண்டு வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற பெண் ஒருவர் பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் ஆபரண நகை கண்காட்சி கடந்த வியாழக்கிழமை நடைப்பெற்றுள்ளது.இந்த கண்காட்சியில் சீனா நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் பங்கேற்று அங்குள்ள நகைகளை பார்வையிட்டுள்ளார்.விலை உயர்ந்த ஆபரண நகைகள் மத்தில் சுமார் 1,95,000 பவுண்ட் மதிப்புள்ள வைர கல்லும் இருந்துள்ளது. இந்த வைரக்கல்லை வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற அந்த பெண், அந்த வைரக்கல்லை எடுத்துவிட்டு அந்த இடத்தில் போலியான ஆபரணக்கல்லை வைத்துள்ளார். விமான நிலையத்தில் பொலிசார் கண்டுபிடித்து விடுவார்கள் என எண்ணிய அந்த பெண், வைரக்கல்லை விழுங்கி விட்டு அந்த கண்காட்சியை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர், பாங்காக்கில் உள்ள சுவர்ணபூமி விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டுக்கு தப்ப முயன்றுள்ளார். விமான நிலையத்தில் பொலிசார் அந்த பெண்ணை பரிசோதனை செய்தபோது, எந்திரம் சந்தேகத்திற்குரிய ஒலி எழுப்பியதால், அவரை தனியாக கொண்டு எக்ஸ்-ரே மூலம் தீவிர பரிசோதனை செய்தனர். அப்போது, அந்த பெண்ணின் குடல் பகுதியில் வைரக்கல் இருந்ததை கண்டுபிடித்ததும் அவரை உடனே கைது செய்து மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். மருத்துவமனையில் அந்த பெண்ணிற்கு மலத்தை இளக்கும் மருந்துகளை கொடுத்துள்ளனர். ஆனால், அந்த சிகிச்சை தோல்வியில் முடிந்துள்ளது. பின்னர், குடல்தொலைநோக்கி என்ற நவீன அறுவை சிகிச்சை மூலம், குடலில் இருந்து அந்த வைரக்கல்லை மருத்துவர்கள் வெற்றிகரமாக வெளியே எடுத்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். வைரத்தை கடத்திய பெண் மற்றும் அவருடன் சென்ற ஒரு ஆண் உள்பட இருவரை கைது செய்த பொலிசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். |