வில்லங்கத்தை விலைக்கு வாங்கிய செல்வம் அடைக்கலநாதன்

363

கடந்த சில வாரங்களாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளிவந்தன. இரு பாராளுமன்ற உறுப்பினர்களும், ஒரு வடமாகாணசபை அமைச்சரும் அரசிற்கு விலைபோய்விட்டதாகவும், அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் அமைச்சர் பதவிக்காக இரகசிய சந்திப்புக்கள் இடம்பெற்றதாகவும் செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளது. இதனது உண்மைத்தன்மை என்னவென்று பார்க்கின்றபொழுது, குறித்த அரசியல்வாதிகளிடம் நேரடியாக தொலைபேசியில் தொடர்பினை மேற்கொண்டு வினவியதற்கமையவும், அவர்களுடைய கருத்துக்களின் படியும் இச்செய்தியில் தாம் விலைபோய்விட்டதாக கூறப்பட்ட விடயங்கள் பொய்யானவை என மறுப்புத்தெரிவித்துள்ளனர். குறிப்பாக சொல்லப்போனால் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் அழைப்பின் பேரிலேயே பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ அவர்களை சந்திக்கச் சென்றதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருந்தார்.

kothapaya_2
இதனுடைய பிரச்சினை என்னவென்று பார்க்குமிடத்து மன்னார், முள்ளிக்குளம் (இதுவரை பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகின்றது) பிரதேசத்தில் இரு வருடங்களுக்கு முன்பதாக பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷவினால் அங்கு வாழக்கூடிய 175 குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தது. ஆனாலும் இப்பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களுக்கு இதுவரையிலும் நூற்றுக்கு ஐந்து விகிதமான அபிவிருத்திகளே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இப்பிரச்சினையைக் கருத்திற்கொண்டே கோத்தபாய ராஜபக்ஷவை அனுகுவதனூடாக இப்பிரதேச மக்களின் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்பதாலும், ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களின் தூண்டுதலின் அடிப்படையிலேயே வடமாகாண மீன்பிடித்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரனோடு சென்றிருந்தோம்.
அமைச்சர் டெனீஸ்வரனின் கருத்தின்படி இதுவரை 82 வீடுகள் நிர்மாணிக்கும் முகமாக தலா ஒவ்வொரு குடும்பத்திற்குமான முழுத்தொகை 56,000 ரூபாய் எனவும், அதன்; முதற்கட்டமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20,000 ரூபாய் வழங்கப்பட்டிருப்பதாகவும் ஏனைய சில வசதிகளுக்காக அந்தந்த பொறுப்புக்களிலுள்ளவர்களிடமிருந்து நிவாரணங்களும் எனது அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. முள்ளிக்குளத்தில் வசிக்கின்ற இக்குடும்பங்கள் இன்னமும் வசதிகளின்றி காணப்பட்டதன் காரணமாகவே பாதுகாப்பு செயலர் அவர்களைச் சந்திக்கநேர்ந்தது.

tna
மக்கள் இதிலொரு விடயத்தினை புரிந்துகொள்ளவேண்டும். மாகாணசபையினூடாக செய்யப்படும் அபிவிருத்திகளை அரசாங்கமே வழங்குகின்றது. ஆகவே இதனை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே அழைப்பினை ஏற்று அங்கு நாம் சென்றிருந்தோம். தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை இதில் என்னைப்பொறுத்தவரையில்; நான் தெளிவாக இருக்கின்றேன். அரசாங்கத்திற்கு விலைபோவதற்காக நான் இந்த அமைச்சுப் பதவியினை பொறுப்பேற்கவில்லை. மக்களுக்கு சேவை செய்வதற்காகவே நான் இந்த பதவியை ஏற்றுக்கொண்டேன். அதனையே எனது பிரதேசத்திற்கும், ஏனைய பிரதேசங்களுக்கும் செய்கின்றேன். தமிழ்த்தேசியம் என்று வருகின்றபொழுது நான் புலிக்கொடியினை கையிலேந்திப்போராடவும் தயார்.
அமைச்சர் என்ற வகையில் மக்களுக்கான கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுப்பதற்கு அதற்கான முன்னெடுப்புக்களைச் செய்வது தவறில்லை. அதற்காக நாம் அரசிற்கு சோரம்போய்விட்டதாக நீங்கள் பார்க்கக்கூடாது. இன்னும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பல்வேறு விடயங்கள் மேற்கொள்ளவிருப்பதாகவும் அமைச்சர் டெனீஸ்வரன் அவர்கள் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் கருத்துத்தெரிவிக்கையில், ஒரே இலட்சியத்தோடும், குறிக்கோளுடனும் போராட்டத்தில் களமிறங்கிய நாம் வௌ;வேறு சந்தர்ப்பங்களில் சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக சகோதர யுத்தம் இடம்பெற்றது. இதன் சூத்திரதாரியாக இந்தியரசு செயற்பட்டது. தற்போது சமாதான காலம் நிலவியுள்ள இந்த நிலையில், இன்னுமொருமுறை ஆயுதமேந்திப்போராடும் அளவிற்கு எம்மினம் தள்ளப்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாயிருக்கின்றோம். நான் தற்பொழுது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றேன். பிரபாகரனால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதோ அன்றிலிருந்து இன்றுவரை தமிழ்த்தேசியத்திற்கோ அல்லது தமிழினத்திற்கோ துரோகம் விளைவிக்க நான் நினைக்கவில்லை.
தலைவர் பிரபாகரன் எம்மை வன்னிக்கு அழைத்தபோது கூறிய விடயம், செல்வம் நாம் பழையனவற்றையெல்லாம் மறந்து இதயசுத்தியுடன் மக்களுக்காக சேவைசெய்ய வேண்டும். தமிழ் மக்களுக்கான தீர்வு தமிழீழமே. எக்காலத்திலுமே தமிழ் மக்களுக்கான தீர்வினை அரசு வழங்கப்போவதில்லை. அறவழிப்போராட்டத்தின் மூலம் தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்காக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு களமிறக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஆயுதபலமும் எம்மிடம் இருக்கவேண்டும் என்றார்.
ரெலோவின் தலைவர் என்ற வகையிலும் நான் அவரைச் சந்திக்க முற்படவில்லை. ஆயர் இராயப்பு ஜோசப்பின் அழைப்பின் பேரில் நான் சென்றிருந்தேன். ஆனால் ஊடகங்களில் நாம் இலங்கையரசிற்கு விலைபோய்விட்டதாகவும், பதவிகளுக்கு ஆசைப்பட்டு தன்மானத்தை விற்றுவிட்டோம் என்று செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. இது மிகவும் வருத்தத்தை தோற்றுவித்துள்ளது.
செய்திகளை பரபரப்பாக வெளியிட்ட ஊடகங்ள் உண்மைத்தன்மையை ஆராய்ந்து வெளியிடாமை ஏன்? இது தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் உள்ளவர்களிம் நாம் சந்திக்கச் சென்றதற்கான காரணங்கள் தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. முதன் முதலில் தோன்றிய இயக்கமாக ரெலோ அங்கம் வகிக்கின்றது. சாவகச்சேரி தாக்குதலில் போராட்ட இலட்சியத்தோடு செயற்பட்டவர்கள் அனைவரும் தேசத் துரோகிகள் அல்ல. ஊடகங்கள் எவ்வாறான விமர்சனங்களை முன்வைத்தாலும் தமிழ் மக்களுக்கும், தமிழ்த்தேசியத்திற்கும் விசுவாசமாக நடந்;துகொள்வேன் என்பதை உறுதிபடக் கூறிக்கொள்கின்றேன்.

 

ஏற்கனவே இவ்வமைப்புக்கள் அரசிற்கு விலைபோனதன் காரணமாக, மீண்டும் எம் தமிழினம் இவர்களால் காட்டிக்கொடுக்கப்பட்டுவிடுமோ என்கின்ற அச்சம் காரணமாகவும், ஊடகங்களும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிலுள்ளவர்களும், வடமாகாணசபையிலுள்ளவர்களும் தமது தனிப்பட்ட கருத்துக்களை தெரிவித்ததன் ஊடாக இவ்வமைச்சர் மீதும், செல்வம் அடைக்கலநாதன் மீதும் சேற்றினை பூசும் சம்பவம் ஊடகங்களினூடாக ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

– மறவன் –

SHARE