விளையாட்டு வீரரொருவர் கொடூரமாக அடித்துக்கொலை

36

 

களனியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பேலியகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களனி, வாசல பகுதியினை சேர்ந்த மரதன் ஓட்டப்பந்தய வீரரான ரணசிங்க சரத் என்ற 59 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

கொலைக்கான காரணம்
பிரதேசத்தில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலே இந்த கொலைக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE