விழிபிதுங்கி வெளியேறிய ‘அழகுப்புயல்’ ஷரபோவா: அதிரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்த செரீனா

167
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் ரஷியாவின் மரிய ஷரபோவாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்.மகளிர் ஒற்றையர் பிரிவில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை செரீனா வில்லியம்சும், 4ம் நிலை வீராங்கனை மரிய ஷரபோவாவும் மோதிய இந்தப் போட்டி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிற வைத்தது.இருவரும் இதுவரை 19 முறை மோதியுள்ளனர். ஆனால் இதில் செரீனாவே அதிகமுறை வெற்றி பெற்றுள்ளார்.

இவர் 17 முறையும், ஷரபோவா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த மோதலில் கூட வெற்றி வாய்ப்பு செரீனா பக்கமே இருந்தது.

இந்த ஆட்டத்தில் அவர் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் ஷரபோவாவை வீழ்த்தி 8வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

செரீனாவை வீழ்த்தி 11 ஆண்டு காலம் ஆகிவிட்ட நிலையில், ஷரபோவா இந்த போட்டியில் இந்த தொடர் சோகத்துக்கு முடிவு கட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் அவரிடம் தோல்வியடைந்துள்ளார்.

SHARE